"நான் நினைத்து என்னவென்றால்".. போஸ்டரை பார்த்ததும் ஸ்டாலினுக்கு வந்த ஐடியா! அது என்ன "எம்எம்" சிஎம்?
மதுரை: தென் மண்டல பயணத்தின் போது நெல்லையில் பார்த்த போஸ்டர் ஒன்று தன்னை முதல்வர் ஸ்டாலின் கவர்ந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தென் மண்டலத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அதன்பின் நெல்லைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் இன்று கலந்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி- செல்லம்மாள் தம்பதியின் மூத்த மகன் தியானேசுக்கும், திருச்சி சிவக்குமார்- பொன்னம்மாள் தம்பதியின் மகள் ஸ்மிர்தவர்ஷினிக்கும் இடையில் நடந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டார்.

ஸ்டாலின் பேச்சு
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரையில் மட்டும் ஏகப்பட்ட நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் அரசின் சார்பில் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். அமைச்சகர்கள், அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஊரக பகுதி அதிகாரிகள், நகராட்சி நிர்வாகிகள் என்று எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இரவு, பகல் பாராது மக்களுக்காக இவர்கள் உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால்தான் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது.

நெல்லை
நேற்று நான் நெல்லையில் காரில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது என்னை வரவேற்க்க பலர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அப்படி காரில் செல்லும் போது ஒரு போஸ்டர் என்னை கவர்ந்தது. அதில் என்ன இருந்தது என்றால்.. ஏஎம்.. பிஎம் பார்க்காத சிஎம் போட்டு இருந்தனர். அதாவது காலை.. மாலை என்று பார்க்காமல் உழைக்கும் சிஎம் என்று போட்டு இருந்தனர். அந்த போஸ்டரை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது.

போஸ்டர்
அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அப்போது நான் நினைத்து என்னவென்றால்.. இந்த ஏஎம்.. பிஎம் என்பதற்கு பதிலாக நான் எம்எம் சிஎம் என்று இருக்கவே விரும்புகிறேன். எம்எம் சிஎம் என்றால் மினிட் டூ மினிட் சிஎம்,. நான் ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க விரும்பவில்லை. முதல்வராக இருக்கும் நான் மக்களுக்காக உழைக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது.

எம்எம் சிஎம்
எந்த ஒரு நொடியையும் வீணடிக்காமல் உழைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மினிட் டூ மினிட் நான் உழைப்பேன். மக்களுக்காக பாடுபட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் டி. என் நம்பர் 1 என்று ஆகும். அதாவது தமிழ்நாடு நம்பர் 1 என்று ஆகும். அதற்காகவே நான் மக்கள் பணிகளை செய்து வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications