தமிழகத்தில் அதிகரிக்கும் கரும்பூஞ்சை கேஸ்கள்.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால் என்ன?- முழு பின்னணி
சென்னை: தமிழகத்தில் கரும்பூஞ்சை நோய் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சில முக்கிய நோய்களை மட்டுமே தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் கரும்பூஞ்சையும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் நிறைய அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியல் உள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றால், குறிப்பிட்ட சில நோய்கள் மக்களுக்கு ஏற்பட்டால் உடனே அந்த நோய் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அல்லது இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உதாரணமாக எய்ட்ஸ் என்பது கொடிய நோய், இது யாருக்காவது திடீரென ஒரு பகுதியில் ஏற்பட்டால், அந்த மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

எப்படி
இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கரும்பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. 51% இறப்பு சதவிகிதம் கொண்ட கரும்பூஞ்சை தாக்குதல் மிகவும் கொடூரமான நோயாக பார்க்கப்படுகிறது. இதை ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது.

தெலுங்கானா
நேற்று தெலுங்கானா மாநிலம் இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று தமிழக அரசும் இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதற்கு முன் எய்ட்ஸ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இருந்தது. இது போன்ற முக்கியமான நோய்கள் மட்டுமே இந்த பட்டியலில் இருந்தது.

எய்ட்ஸ்
எய்ட்ஸ், சின்னம்மை, காலரா, டெங்கு, டிப்தெரியா, ஹெபிடடிஸ், இன்ப்ளூயன்சா, லெப்ரோசி, மலேரியா, மீசல்ஸ், செரிப்ரோ ஸ்பைனல் பீவர், பிளேக், போலியோ, ரேபிஸ், டெட்டானஸ், பெரிய அம்மை, டைபாய்ட், டியூபர்குளோசிஸ் என்று முக்கியமான நோய்கள் ஏற்பட்டால் மட்டுமே அரசு பொது சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும்.

லிஸ்ட்
மூக்கு வழியாக அல்லது காது வழியாக உடலுக்குள் செல்லும் கரும்பூஞ்சை இதயம், மூளையை தாக்கும் ஆபத்து கொண்டது. தற்போது இந்த லிஸ்டில் கரும்பூஞ்சையை தமிழக அரசு சேர்த்துள்ளது. இந்த நோய் வேகமாக மக்களிடம் பரவுவதால், இதன் காரணமாக உயிரே போக வாய்ப்புள்ளதாலும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி, எச்சிலில் ரத்தம், தொண்டையில் வலி, மூக்கடைப்பு ஆகியவை பிளாக் பங்கஸ் ஏற்பட்டால் வர கூடிய அறிகுறிகள் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications