ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்ல! ஆசையாக பேசிய எடப்பாடி! கனவை கலைத்த ஓபிஎஸ்! ஃபுல் பவர் "இவருக்குத்தான்"
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் வைத்து வரும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்பு புதிய வாதம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
Recommended Video
டேய் இவன் போற பக்கம் எல்லாம் ஆள் போடுடா என்று வடிவேல் காமெடியில் வரும்.. இப்போது எடப்பாடிக்கு அதே விஷயத்தைத்தான் ஓ பன்னீர்செல்வம் செய்து வருகிறார். எடப்பாடி போகிற பக்கம் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் கேட் போட்டு வருகிறது.
எடப்பாடி எந்த சட்ட விதியை தூக்கிக்கொண்டு வந்தாலும்.. எங்க கிட்டயும் சீப்பு இருக்கும் என்பது போல.. ஓ பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்து வருகிறார். அதில் புது வரவு ஒருங்கிணைப்பாளர் பதவி பறிப்பு!

என்ன சொன்னார் ?
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூற தொடங்கி உள்ளார். ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்து போடுகிறேன். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் கையெழுத்து போடுங்கள் என்று கோரிக்கை வைத்து ஓபிஎஸ் எடப்பாடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு எடப்பாடி எழுதிய பதில் கடிதத்தில்தான், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று குறிப்பிட்டார்.

நீக்கம்
அந்த பதவி காலாவதியாகிவிட்டது. சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை. அதனால் நீங்கள் இதில் கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த நிலையில்தான் இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரண்டு விதமான வாதங்களை கையில் எடுத்துள்ளது. முதல் வாதம்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எப்படி காலியாகும்?

பொதுக்குழு
கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அது காலாவதி ஆகிவிட்டது என்கிறார் எடப்பாடி. அதே பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நியமன தீர்மானமும் அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி என்றால் பொதுக்குழுவும் காலாவதியாகிவிட்டதா? அதாவது பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் நீக்கப்படுவதாக அர்த்தமா என்று கேட்டுள்ளனர்.

கேள்வி
இது போக இரண்டாவது வாதம்தான் இன்னும் தீவிரமாக உள்ளது. அதன்படி, 2017ல் எடப்பாடி - ஓபிஎஸ் இணைந்த போது உடனே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவில்லை. மாறாக தேர்தல் ஆணைய தீர்ப்பில் கழகத்தில் பொதுச்செயலாளர் இல்லாத போது கழக அவைத்தலைவர், பொருளாளர் ஆகியோருக்குத்தான் சம உரிமை இருக்கும். உயர் அதிகாரம் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

அவைத்தலைவர்
அவைத்தலைவர் நியமனம் தற்போது தவறு. அதனால் பொருளாளர் மட்டுமே இருக்கிறார். பொருளாளர் ஓபிஎஸ்தான் இப்போது கட்சியில் அதிக பவர் கொண்ட தலைவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றால் தானாக பொருளாளர் ஓபிஎஸ்ஸுக்கு பவர் வந்துவிடும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கிறது. அதாவது தலைமை கழக செயலாளர் எடப்பாடிக்கு எந்த விதமான பவரும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது.

கேட் போடுங்க
அதாவது ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால்.. பொதுக்குழுவும் இல்லை. அதோடு ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால் பொருளாளருக்குதான் முழு பவர். அந்த பொருளாளர் நான்தான் என்ற வாதத்தை ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைக்க தொடங்கி உள்ளது. முன்னதாக எங்க போனாலும் ஆள் போடுங்கடா என்பது போல எடப்பாடி பழனிசாமி எடுக்கும் ஒவ்வொரு மூவிற்கும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கட்சி விதிகளை வைத்தே பதிலடி கொடுத்து வருகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications