"ஆபரேஷன் நியோ".. எடப்பாடி கையில் எடுத்த மாபெரும் திட்டம்! வைத்தீஸ்வரன் கோவில் சபதம்.. பரபர பின்னணி!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் சட்ட வல்லுனர்கள், அரசியல் வல்லுனர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு வரும் 23ம் தேதி கூட உள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, அவரை அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க எடப்பாடி தரப்பு முயன்று வருகிறதாம்.
இதன் மூலம் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் அல்லது தலைவர் பதவியை உருவாக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக நம்புகிறது.

இதுதான் நேரம்
இதற்காகவே ஓபிஎஸ் வீட்டில் அடுத்தடுத்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஓபிஎஸ்சை சமாதானம் செய்ய நேற்று தம்பிதுரை அவரின் வீட்டிற்கு சென்றார். சுமார் 1 மணி நேரம் இந்த மீட்டிங் நடந்தது. அதன்பின் செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸிடம் சமாதானம் செய்ய சென்றார். இன்று மீண்டும் இதே போன்ற சமாதான கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதிமுகவை மொத்தமாக கைப்பற்ற இதுதான் நேரம் என்று எடப்பாடி கருதுவதே.. அவர் வேகம் காட்ட காரணம் என்கிறார்கள்.

அனலைஸ் செய்து இருக்கிறார்
இப்போது டெல்லி பிரஷர் எதுவும் இல்லை. சசிகலா வலுவாக இல்லை. அடுத்த 2 வருடத்திற்கு தேர்தல் இல்லை. இப்போது தலைமையை பிடித்தால் கட்சியை 2 வருடத்தில் தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதேபோல் மாவட்ட செயலாளர்கள் 90 சதவிகிதம் பேர் தன் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் இதைவிட கட்சியை கைப்பற்ற வேறு நேரம் இல்லை என்று அவர் கருதுகிறாராம். இதற்காக சில வல்லுனர்களை வைத்து சாதக, பாதகங்களை அவர் ஆராய்ந்து இருக்கிறார்.

டெல்லி பிரஷர் இல்லை
முழுமையாக சாதக, பாதகங்களை அவர் அலசி ஆராய்ந்து.. அனாலிசிஸ் செய்த பின்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். கட்சி தனது கைக்கு வரும் என்பது தனக்கு தெரிந்தே அவர் களமிறங்கி உள்ளார். முன்பெல்லாம் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடும். இப்போது பாஜக தங்களை தமிழ்நாட்டில் வலுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் அதிமுக விவகாரத்தில் இந்த முறை முன்பு போல தலையிடுவது இல்லை. எடப்பாடியும் பாஜக இதில் தலையிட கூடாது என்று கண்டிப்புடன் பாஜக தரப்பிற்கு சொல்லி இருக்கிறாராம். சமீபத்தில் வைத்தீஸ்வரன் கோவில் சென்ற எடப்பாடி தனது ஆரோக்கியம் குறித்து வேண்டிக்கொண்டு.. கட்சியை கைப்பற்றுவேன் என்று சபதம் செய்து இருக்கிறாராம்.

பை லா என்ன சொல்கிறது?
அதிமுகவை கைப்பற்ற காற்றில் ஒன்றும் எடப்பாடி படம் வரையவில்லை. சட்ட ரீதியாக பின் வரும் ஓட்டைகளை பயன்படுத்திதான் அவர் அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளாராம்.
அதிமுக சட்டப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வில் பொதுக்குழு நினைத்தால் கூட மாற்றம் செய்ய முடியாது. ஆனால் இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த பொதுக்குழுவில்தான் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
இதை பயன்படுத்தி, பொதுக்குழுவில் சட்டம் அமலுக்கு வரும் முன்பே, அதை நீக்க தீர்மானம் கொண்டு வர எடப்பாடி முயன்று உள்ளதாக கூறப்படுகிறது.

தற்காலிகம்
அதோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டால், பைலாபடி 6 மாதங்களுக்கு தற்காலிக பொதுச்செயலாளரை கொண்டு வர வேண்டும். பொதுக்குழுவில் மெஜாரிட்டி வாக்குகள் இருந்தால் அப்படி தேர்வு செய்ய முடியும். அதிமுகவில் 2300 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும். பொதுச்செயலாளர் பதவியை தற்காலிகமாக பிடித்து பின் நிரந்தரம் ஆகிவிடலாம்..

ஆபரேஷன் நியோ
அரசியலில் நியோ என்று வார்த்தையை புதிய தொடக்கம் என்ற பொருளில் பயன்படுத்துவார்கள். அதாவது ஒரு அமைப்பின் புதிய தொடக்கம், இரண்டாவது சீசன் என்று பொருள்படும் வகையில் கூறுவார்கள். அந்த வகையில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆக விரும்பும் இந்த புதிய சீசனை அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் ஆபரேஷன் நியோ என்று அழைக்கிறார்களாம். கண்டிப்பாக இந்த முறை அவர் கட்சியை கைப்பற்றாமல் விட மாட்டார் என்கிறார்கள் எடப்பாடி கேம்ப் நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications