பரனூர் பக்கம் போறீங்களா? மூச்சு முட்டும் அளவுக்கு டிராபிக்.. காலையிலேயே இந்த நிலையா! புலம்பும் மக்கள்
சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முற்படுவதால் பல இடங்களில் மிக மோசமான நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
நமது நாட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வரும் அக். 24இல் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்தியாவே தயாராகி வருகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாகப் பெரியளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை பெரியளவில் கொண்டாட மக்கள் ரெடியாகி வருகின்றனர்.

தீபாவளி
இந்தாண்டு திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வார இறுதி நாட்களுடன் வருவதால் அனைவரும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்புவோருக்கு உதவும் வகையில் 21.10.2022 முதல் 23.10.2022 வரை 3 நாட்களுக்குப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

சிறப்பு பேருந்துகள்
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமே சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இதனால் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாகச் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டுமே அரசு பேருந்துகள் மூலம் 1.65 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பி உள்ளதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.

டிராபிக்
இதனால் நேற்று மாலை முதலே கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் டிராபிக் அதிகமாக இருந்தது. மிகவும் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் சூழல் உருவானது. சில கிலோ மீட்டர் கடக்கவே மணிக்கணக்கில் நேரம் ஆனது. பெருங்களத்தூரை தாண்டுவதற்குள்ளாகவே பலரும் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது என்றே சொல்லலாம்.

போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக கார்களில் சொந்த ஊர் திரும்பும் மக்கள் தாம்பரம் வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இருந்த போதிலும், டிராபிக் அதிகமாகவே இருந்தது. குறிப்பாகச் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் டிராபிக் மிக அதிகமாகவே இருந்தது. வேலைக்குச் செல்லும் மக்கள், சொந்த ஊர் திரும்பும் மக்கள் என ஒரே நேரத்தில் இரு தரப்பும் முற்றுகையிட்டதால் அங்கு மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரனூர் டோல்கேட்
இப்படி ஒரே நேரத்தில் கார்கள் அதிகம் குவிந்ததே பரனூர் சுங்கச்சாவடியில் டிராபிக் அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது. காலை நேரத்திலேயே இந்த அளவுக்கு டிராபிக் இருந்தால் மாலை இதை விட அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்குத் திரும்பும் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications