உலகத்தையே முடக்குமாமே.. சூரியக்காற்றின் கோரமுகம் இதுதான்! ரிஸ்க் எடுக்கும் ஆதித்யா- எல் 1 விண்கலம்
சென்னை: இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் ஒட்டுமொத்த பூமியையும் முடக்கும் திறன் கொண்ட சூரியக்காற்றை ஆய்வு செய்ய சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தென்துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவரும் நிலவில் கால் பதித்தது.

தற்போது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் சிறப்பான ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.
சந்திரயான் -3 வெற்றி என்பது இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - 57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டது.
இதையடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 125 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' எனும் எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த புள்ளி என்பது பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதையடுத்து அங்கிருந்தபடியே சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை 'ஆதித்யா' மேற்கொள்ளும். இந்த விண்கலம் சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்கு கொரோனா உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இதற்காக ஆதித்யா- எல்1 விண்கலத்தில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்பட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன. இதில் 3 கருவிகள் சூரியனின் மேற்பகுதியை ஆய்வு செய்யும். 4 கருவிகள் சூரியனில் இருந்து வெளியேறும் துகள்கள், வெப்பக்காற்று, பிளாஸ்மா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தின் மிகவும் முக்கிய பணிகளில் ஒன்று என்பது சூரியனில் இருந்து வரும் வெப்பமான காற்று குறித்த ஆய்வை மேற்கொள்வது. அதாவது தினமும் சூரியனில் இருந்து வெப்பதுகள்கள், காந்தசக்தி கொண்ட மின்னூட்டமுள்ள துகள்கள் வெளியேறும். இதனை தான் சூரியக்காற்று என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் புரோட்டான் உள்ளிட்ட மின்காந்த துகள் உள்ளன. இந்த அயனி நிலையில் இருப்பதால் அதிக வெப்பத்துடன் இருக்கும். இதனால் வெப்பமான சூரியக்காற்று பூமி உள்பட சூரிய குடும்பத்தின் அனைத்து பகுதிகளையும் நோக்கி பயணிக்கிறது.
அதிர்ஷ்டவசமாக சூரியக்காற்று பூமிக்கு வருவது இல்லை. அதாவது பூமிக்கு மேல்புறம் இருக்கும் காந்தபுல அடுக்கு சூரியனின் வெப்பக்காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட சமயத்தில் சூரிய வெப்பக்காற்றின் அளவு அதிகரிக்கும்போது அது பூமிக்குள் கசியும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். இத்தகைய சூழலில் தான் ஆதித்யா எல் - 1 சூரிய வெப்பகாற்று குறித்த ஆய்வை மேற்கொள்கிறது.

இதுகுறித்த ஆய்வை ஆதித்யா -எல் 1 விண்கலத்தில் உள்ள சோலார் விண்ட் பார்ட்டிக்கல் எக்ஸ்பிரிமென்ட் மேற்கொள்ளும் (அஸ்பெக்ஸ்) எனும் இன்-சிட்டி எனும் பெயரில் சில கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் சூரிய வெப்பக்காற்று குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதுபற்றி இஸ்ரோ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛சூரிய வெப்பக்காற்று மற்றும் கரோனல் மாஸ் எஜெக்சன் போன்ற வெடிக்கும் சூரிய நிகழ்வுகள் விண்வெளிப்பகுதியை பாதிக்கலாம். மேலும் பூமியின் காந்தபுலத்துக்குள் நுழையலாம். இது நடக்கும் பட்சத்தில் பூமியின் சுற்றுவட்டபாதையில் சுற்றி பாதைகளில் சுற்றி வரும் செயற்கைகோள்கள் பாதிக்கப்படலாம். மேலும் பூமியில் தகவல் தொடர்பு சேவைகள், மின்பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதனால் உலகமே பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் சூரிய வெப்பக்காற்று குறித்த ஆய்வு மிகவும் முக்கியமானது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications