“அந்த” வார்த்தை.. அதிமுகவின் உதவித்தொகை.. கமலின் ஊதியம்! திமுகவின் “உரிமைத் தொகையில்” என்ன ஸ்பெஷல்?
வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று பெண்களை சொல்லிவிட்டு அவர்களின் வேலையை உதாசீனப்படுத்துவது தொடர்ந்து வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் இதற்கு ஊதியம் என்றும், அதிமுக உதவித் தொகை எனவும் அறிவித்த நிலையில் திமுக இதற்கு உரிமைத் தொகை என பெயர் வைத்தது ஏன்?
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகள் மகளிருக்கு மாதாமாதம் நிதி வழங்கும் திட்டம் பொதுவாக இடம்பெற்றது.
மக்கள் நீதி மய்யம் இதற்கு ஊதியம் என்றும், அதிமுக உதவித் தொகை எனவும் பெயர் வைத்தன. ஆனால், திமுக உரிமைத் தொகை என்று பெயர் வைத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

நிதியமைச்சர் அறிவிப்பு
இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தார். அவர் பேசுகையில், "சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

மகளிர் உரிமைத் தொகை
மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

மகளிர் திட்டங்கள்
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை.

உரிமைத் தொகை
இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

பேருதவி
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்
1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

அண்ணா பிறந்தநாள்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

ரூ.7,000 கோடி நிதி
இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

தனித்து நின்ற திமுக
இதில் உரிமைத் தொகை என்று பெயர் வைத்ததன் மூலம் மற்ற கட்சிகளின் வாக்குறுதிகளில் இருந்து தனித்து நின்றது திமுக. காரணம் இல்லத்தரசிகள் என வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் சமையல், குழந்தைகளை பார்த்துக்கொள்வது, குடும்ப நிர்வாகம் போன்றவற்றை ஒரு வேலையாகவே பெரும்பாலானவர்கள் மதிப்பது இல்லை.

மகளிர் உரிமை
அவர்கள் வீட்டில் செய்யும் வேலையில் ஒரு பகுதியை செய்ய பணிப்பெண்ணை வைத்தால் கூட மாதம் சில ஆயிரங்களை கொடுக்க வேண்டும். ஆனால், வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று பெண்களை சொல்லிவிட்டு அவர்களின் வேலையை உதாசீனப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்த ஆயிரம் ரூபாய் என்பது மகளிருக்கான உதவி அல்ல, உரிமை என்று அறிவித்து அவர்களின் சுயமரியாதை காத்து உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications