சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்.. கண்டனம் தெரிவித்த ஹைகோர்ட்.. பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்கவுன்சில் அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து விசாரணை செய்தனர். காரை ஓடி வந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை பெற்று அபராத ரசீதை கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

அங்குவந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவகவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தாய் மகள் கோரிக்கை

தாய் மகள் கோரிக்கை

இதனையடுத்து தலைமை காவலர் ரன்ஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்தனர். கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவையும் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாய் மகள் இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கண்டனம்

கண்டனம்

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

வழக்கறிஞருக்கு என்ன வேலை

வழக்கறிஞருக்கு என்ன வேலை

மருத்துவர்கள் காவல்துறையினர் என முன்களப்பணியாளர்கள், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், அனைவரும் கொரோனா பயத்தில் ஊரடங்கு நேரத்தில் இருக்கும்போது வழக்கறிஞருக்கு என்ன வேலை என்றும் கண்டனம் தெரிவித்தார். முன்ஜாமீன் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக லட்சம் ரூபாய் தரமுடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சிலை பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைத்துள்ளார்.

English summary
The madras High Court has issued an order directing the Bar Council to report on what action has been taken against the lawyer who violated the limit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X