தமிழக சட்டசபையில் இன்று! முடிவடையும் கூட்ட தொடர்! பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில்!
சென்னை: தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிக்கிறார்கள். அத்துடன் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார். இதையடுத்து தமிழக நிதிநிலை அறிக்கை தடைகளைத் தாண்டி என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. இந்த வேளாண் பட்ஜெட்டை உழவர் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.
முன் பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது நேற்றைய தினம் காலை, மாலை இரு வேளைகளும் விவாதம் நடத்தப்பட்டது.
நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு இன்று (பிப்ரவரி 22 ஆம் தேதி) துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிக்கிறார்கள். அத்துடன் இந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications