Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மேட்ச் ஜெயிச்சாலும்..இந்திய அணியின் பெரிய வீக்னஸ் கசிஞ்சிடுச்சே! ஆபத்து.. எச்சரித்த எக்ஸ்பர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியின் பெரிய வீக்னஸ் ஒன்று வெளியே தெரிந்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் விமர்சனம் வைத்துள்ள்ளார்.

2023 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வென்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அசாத்திய பேட்டிங்.. பவுலிங் மூலம் வென்றது. கோலியின் அல்மோஸ்ட் சதம். சமியின் 5 விக்கெட்டுகள்.. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி வியூகம் என்று இந்திய அணி ஆல் ரவுண்டர் பார்பார்மன்ஸ் மூலம் எளிதாக நேற்று வென்றது.

இந்தியா வெற்றி: நேற்று முதலில் 19 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால் அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டதால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. 20+ ரன்கள் இருந்த போது ரவீந்திர ராச்சின் அடித்த பந்தை எளிதாக கைக்கும் வந்தும் கூட ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார். இந்த கேட்ச் மிஸ் காரணமாக நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு 179 ரன்கள் வரை அடித்தது.

What is the biggest weakness of Team India in World Cup 2023 and is it depending on Kohli?

முக்கியமாக ராச்சின் 75 ரன்கள் வரை அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் டெர்லி மிட்சல் 130 ரன்கள் வரை அடித்து இந்திய அணிக்கு பிரஷர் கொடுத்தார். கடைசியில் நியூசிலாந்து ரன்களை கட்டுப்படுத்திய இந்திய அணி.. நியூசிலாந்து அணியை பிடித்து இழுத்து 273 ரன்களுக்கு சுருட்டியது. இதையடுத்து ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று ஆட்டத்தை தொடங்கினார். 4 சிக்ஸ் , 4 பவுண்டரி என்று அதிரடியாக தொடக்கம் கொடுத்தவர் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

( அது என்ன ரகசியம்? 90ஸ் ஆஸ்திரேலியா போல அசைக்க முடியாத இந்திய அணி! தொடர் வெற்றிக்கு பின் 5 காரணங்கள்! )

கோலி அதிரடி; கடைசியில் கோலி கடைசி வரை ஆடி 95 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவும் அதிரடியாக ஆடி 39 ரன்கள் எடுத்து.. இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இந்திய அணியின் பெரிய வீக்னஸ் ஒன்று வெளியே தெரிந்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் வைத்துள்ளார்.

அவர் செய்துள்ள போஸ்டில், இதுவரை நடந்த 5 மேட்சில் இரண்டாவது முறையாக இந்திய அணியை கோலி வெற்றியை நோக்கி கொண்டு சென்றுள்ளார். இதில் 3வது மேட்சில் ஒரு செஞ்சுரி வேறு அடித்துள்ளார். #WorldCup2023-ல் ஒரு வீரரைச் சார்ந்து இருப்பது அணியின் கண்ணோட்டத்தில் கோலிக்கு சிறப்பானதாக இருக்கலாம். ஆனால் விரைவில் வேறொருவர் கடினமான சேஸிங்களில் சிறப்பான இன்னிங்ஸை ஆட வேண்டும். உறுதியாக இறுதிவரை நின்று ஆட வேண்டும்.

What is the biggest weakness of Team India in World Cup 2023 and is it depending on Kohli?

என்னை பொறுத்தவரை 5 மேட்சில் விராட் கோலி இல்லையென்றால் 2 மேட்சில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதாவது கோலி அவுட் ஆனால் அது இந்திய அணிக்கு பெரிய வீக்காகமாறிவிடும். மற்ற வீரர்கள் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவது இல்லை என்று புகார் செய்துள்ளார்.

இந்திய அணியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைந்து விடுகிறது. ஒன்று ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் பார்ட்னர் ஷிப் அமைகிறது. இதுவரை மிடில் ஆர்டருக்கு பின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. நேற்று ஜடேஜா அந்த குழப்பத்தையும் தீர்த்து வைத்தார். ஆனாலும் கோலி இல்லையென்றால் இந்திய அணியின் வெற்றி நேற்று சாத்தியம் ஆகி இருக்குமா என்பது சந்தேகமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+