அது என்ன ரகசியம்? 90ஸ் ஆஸ்திரேலியா போல அசைக்க முடியாத இந்திய அணி! தொடர் வெற்றிக்கு பின் 5 காரணங்கள்!
சென்னை: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பெரிதாக நின்று ஆடவில்லை என்றாலும் கோலி கடைசி வரை அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இந்திய அணி இந்த தொடரில் வெற்றிபெறுவதற்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

நேற்றும் வெற்றி: இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது.
இன்று 19 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால் அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டதால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. 20+ ரன்கள் இருந்த போது ரவீந்திர ராச்சின் அடித்த பந்தை எளிதாக கைக்கும் வந்தும் கூட ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார். இந்த கேட்ச் மிஸ் காரணமாக நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு 179 ரன்கள் வரை அடித்தது.
முக்கியமாக ராச்சின் 75 ரன்கள் வரை அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் டெர்லி மிட்சல் 130 ரன்கள் வரை அடித்து இந்திய அணிக்கு பிரஷர் கொடுத்தார். அதன்பின் கடைசியில் இந்திய பவுலர்கள் ரன் செல்வதை கட்டுப்படுத்தினர். முக்கியமாக கடைசி கட்டத்தில் ஷமி தொடர்ந்து பிரஷர் கொடுத்து.. அபரா பவுலிங் மூலம் 4 விக்கெட்டுகளை கடைசி ஓவர்களில் எடுத்தார். இந்த மேட்சில் மட்டும் மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணியை பிடித்து இழுத்து ஷமி 273 ரன்களுக்கு நியூஸிலாந்து அணியை சுருட்டினார். இதையடுத்து ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று ஆட்டத்தை தொடங்கினார். 4 சிக்ஸ் , 4 பவுண்டரி என்று அதிரடியாக தொடக்கம் கொடுத்தவர் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 5 பவுண்டரி அடித்தும் 31 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கடைசியில் கோலி கடைசி வரை ஆடி 95 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவும் அதிரடியாக ஆடி 39 ரன்கள் எடுத்து.. இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இந்த தொடரில் இதோடு 5வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதுவரை இந்த தொடரில் ஒரு போட்டி கூட தோல்வி அடையாத அணி என்றால் அது இந்திய அணிதான்.
5 காரணங்கள்: இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடையாமல் இருக்க 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - பார்ட்னர்ஷிப் - இந்திய அணியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைந்து விடுகிறது. ஒன்று ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் பார்ட்னர் ஷிப் அமைகிறது. இதுவரை மிடில் ஆர்டருக்கு பின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. நேற்று ஜடேஜா அந்த குழப்பத்தையும் தீர்த்து வைத்தார்.
காரணம் 2 - இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங். பும்ரா.. தொடர்ந்து மேட்ச்சிற்கு 2 விக்கெட்டுகளை எடுக்கிறார். சிராஜும் 1-2 விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இப்போது ஷமியும் அணிக்குள் வந்து 5 விக்கெட் எடுத்துள்ளார்.

காரணம் 3 - பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான்.
காரணம் 4 - கோலி உட்சபட்ச பார்மில் இருக்கிறார். ஒரு மேட்ச் தவிர மற்ற மேட்ச் அனைத்திலும் இவர் 50+ அடித்துவிட்டார். அதிலும் ஒன்றில் சதம் அடித்துள்ளார். கண்டிப்பாக இந்த சீசனில் இந்தியாவின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணம்.
காரணம் 5- ரோஹித் கொடுக்கும் வேகமான தொடக்கம். அவரின் கேப்டன்சி. பீல்டில் அவர் எடுக்கும் முக்கிய முடிவுகள் கண்டிப்பாக இந்த சீசனில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications