Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவசம் ரெடியா இருக்குல்ல? அடித்து சொன்ன ஸ்டாலின்! வெடிக்க போகும் "பலூன்".. ஆ எடப்பாடி என்ன செய்வாரோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் முக்கியமான சில ரிப்போர்ட்டுகளை திமுக விசாரணைக்கு எடுக்கும் என ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களில் பாஜக தயாராக தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலும் கூட அதிமுகவுடன் கூட்டணி என்று பாஜக தயாராக தொடங்கி விட்டது.

What is the CM Stalin plan against Edappadi Palanisamy after the strong CAG REPORT against AIADMK?

தமிழ்நாட்டில் அதிமுகவில் நிலவிய உட்கட்சி சட்ட பிரச்சனை கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி அதிமுகவை கைப்பற்றிவிட்டார். உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அவர் சட்ட ரீதியாக வென்றுவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவிற்கு எதிராக சில முக்கியமான விஷயங்களை திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் கையில் எடுப்பார்கள் என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவை என்னென்ன விஷயங்கள்?

முதல் விஷயம் - கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணை கோணம் அப்படியே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

இந்த எஸ்டேட்டில் இருக்கும் சில முக்கியமான கோப்புகள் அப்போதே காணாமல் போனதாக தகவல்கள் வந்தன. இந்த கோப்புகளை திருடத்தான் அங்கு கொலை நடந்தேறியதாகவும் கூறப்பட்டன. அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

What is the CM Stalin plan against Edappadi Palanisamy after the strong CAG REPORT against AIADMK?

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது;

மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் குற்றச்செயல்களில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இப்போது நான் பேசுவதை அவையில் இல்லை என்றாலும் எதிர்கட்சித் தலைவர் தனது அறையில் இருந்து கேட்டுக்கொண்டு இருப்பார். கோடநாடு வழக்கில் எதிர்க்கட்சியாக மாறியதும் சிபிஐ விசாரணைக்கு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்தார். அவர்கள் ஆட்சியில் தானே இந்த குற்றச்சம்பவம் நடந்தது. அப்போது ஏன் முறையாக விசாரணை செய்யவில்லை.

இதில் மேல் விசாரணையை எதிர்க்க மாட்டேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதன்பின் மேல் விசாரணைக்கு எதிராக பேட்டி அளித்தார். கோடநாடு பங்களா என்பதும் அந்த கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அம்மையார் பயன்படுத்திய முகாம் அலுவலகம்.உங்கள் ஆட்சியிலேயே இதை நீங்கள் சரியாக விசாரிக்கவில்லை.

அந்த சம்பவம் நடந்ததும் முறையாக ஆதாரங்களை சேகரிக்கவில்லை. ஆண்டுகள் பல சென்றுவிட்டதால் சில விஷயங்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் சிபிசிஐடி இதில் அதிரடி வேகம் காட்டி வருகிறது.

இதில் எடப்பாடி தடுமாறி வருகிறார். சயனுக்கு திமுக வழக்கறிஞர்கள் உதவி வருவதாக சொல்கிறார் எடப்பாடி. சயன் ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக டெஹல்ஹாவில் பேட்டி கொடுத்தனர். இதற்காக சயனுக்கு எதிராக எடப்பாடி வழக்கு போட்டார்.

What is the CM Stalin plan against Edappadi Palanisamy after the strong CAG REPORT against AIADMK?

அந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்றினோம். கோடநாடு வழக்கில் உண்மை வெளியே வரும். திமுக இதில் சும்மா இருக்காது. இதில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது.. உறுதியாக சொல்கிறேன்.. நிச்சயம் சொல்கிறேன்.. சிபிசிஐடி விசாரணையில் வெளியே வரும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

இரண்டாவது விஷயம் - டெண்டர் முறைகேடு: கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.

மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.

அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டன. இந்த புகார்கள் மீதான விசாரணை நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.

ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. அதாவது அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து டெண்டர் விடாமல் மேம்போக்காக டெண்டர் விட்டு உள்ளனர்.

ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்ட போது வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் அர்த்தம் உள்ளே இருந்து கொண்ட சிலர் டெண்டருக்கு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் வேறு வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் விவரங்களும் தற்போது முதல்வர் ஸ்டாலின் கையில் இருப்பதால் அதிலும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புகள் ரெடி- வெடிக்க போகும் "பலூன்" : இதற்கான கோப்புகள் எல்லாம் ரெடியாக இருப்பதால் கண்டிப்பாக எடப்பாடி தரப்பிற்கு பிரஷர் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின், கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் முடங்காது. கண்டிப்பாக அதில் விசாரணை நடக்கும். அந்த வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதில் மாற்றமே இல்லை.

காற்று போன பலூனாக அதிமுக மாஜிக்கள் உள்ளனர். அவர்கள் தவறு செய்துவிட்டனர். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+