கோப்புகள் ரெடி.. வெடிக்க போகும் பலூன்.. எடப்பாடிக்கு இரவோடு இரவாக.. செக் வைக்க முடிவெடுத்த ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு புதிய வழக்குப்பதிவுகளை மேற்கொண்டு உள்ளது.
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாஜி மணியான அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்தப் பணிகள் செய்ய விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. 4 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுத்துள்ளது. அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக பல்வேறு டெண்டர் முறைகேடு
கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.
4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு
மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.
அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டன. இந்த புகார்கள் மீதான விசாரணை நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. அதாவது அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து டெண்டர் விடாமல் மேம்போக்காக டெண்டர் விட்டு உள்ளனர்.
ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்டது
ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்ட போது வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் அர்த்தம் உள்ளே இருந்து கொண்ட சிலர் டெண்டருக்கு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் வேறு வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதன் விவரங்களும் தற்போது முதல்வர் ஸ்டாலின் கையில் இருப்பதால் அதிலும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புகள் ரெடி- வெடிக்க போகும் "பலூன்"
இதற்கான கோப்புகள் எல்லாம் ரெடியாக இருப்பதால் கண்டிப்பாக எடப்பாடி தரப்பிற்கு பிரஷர் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முன்பே வீடியோ ஒன்றில் எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின், கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் முடங்காது. கண்டிப்பாக அதில் விசாரணை நடக்கும். அந்த வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதில் மாற்றமே இல்லை.
காற்று போன பலூனாக அதிமுக மாஜிக்கள் உள்ளனர். அவர்கள் தவறு செய்துவிட்டனர். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications