வீசும் அதிமுக அலை! 15ல் இரட்டை இலை வெல்லும் நிலை? மாறும் தமிழகத்தின் தேர்தல் களம்!
சென்னை; தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் நாளுக்கு நாள் புதிய முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கு சாதகமான ஒரு அலை தென்படுகிறது.
அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவில் இல்லையென்றாலும் 15 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலையே தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், மதுரை, தென்காசி ஆகிய தொகுதிகள் உறுதியாக அதிமுக பக்கம் செல்வதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு அனைத்து தரப்பிலும் வரவேற்கத்தக்க வேட்பாளராக இருப்பதால், அவருடைய வெற்றியும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும் அதிமுகவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

அதே போல ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படும் கோவை தொகுதியிலும் அதிமுகவே வெற்றிபெறும் சூழல் உள்ளது. ஏற்கனவே அதிமுக கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியை கைப்பற்ற அதிமுகவினர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி விருதுநகர், கடலூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக விருதுநகரில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் உள்ள வடசென்னை தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சென்னை வெள்ளம் குறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் சென்னையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எடப்பாடியின் பிரச்சாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்டி பேசும் உக்தி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஹைலைட் பாய்ண்ட் என்ன என்பதை மக்கள் கூர்ந்து பார்க்கும் நிலை உள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் வாக்குகளை கவரும் வண்ணம் அதிமுக ஐடி விங் புதுமையான பிரச்சார உத்திகளை கையாண்டு வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், அனைத்து தளங்களிலும் களத்திலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் முனைப்புடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். தங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் எதிர்பார்ப்பை போலவே தேர்தலில் நல்ல எண்ணிக்கையில் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications