லக்கி! தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் இனி எவ்வளவு? அகவிலைப்படி உயர்விற்கு பின் எப்படி கணக்கிடுவது?
சென்னை: அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால் இனி தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பளம் இனி எவ்வளவாக இருக்கும் என்று இங்கே கணக்கை பார்க்கலாம்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டல் அறிவிப்பில், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இத்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
சம்பளம் எவ்வளவு?: இதனால் இனி தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பளம் இனி எவ்வளவாக இருக்கும் என்று இங்கே கணக்கை பார்க்கலாம்.
உதாரணமாக ஒரு ஊழியருக்கு ரூ.30,000 மாதச் சம்பளமாக இருந்தால், அதில் அடிப்படை ஊதியமாக ரூ.18,000 இருந்தால், அவர்கள் தற்போது ரூ.9,000 டிஏவாகப் பெறுவார்,
இது அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 50% ஆகும். புதிய 3% அதிகரிப்புடன், இந்த ஊழியரின் டிஏ இப்போது ரூ.9,540 ஆக இருக்கும், இது மாதத்திற்கு ரூ.540 கூடுதலாகும்.
எனவே, ஒரே மாதிரியான ஊதிய அமைப்புகளைக் கொண்ட ஊழியர்கள் தங்களின் மாதச் சம்பளம் ரூ. 540 அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அடிப்படை ஊதியம் அதிகமாக இருந்தால், DA அதிகமாகும், அதாவது அதிக அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் அதிக சம்பள உயர்வை பெறுவார்கள்.
இந்த சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதம் மற்றும் அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த முறை 3 சதவிகிதம் அகவிலைப்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications