சந்திரயான் 3: நாமக்கல்லில் நிலவை போல் 100 டன் கற்களை தூளாக்கி டெமோ.. மயில்சாமி அண்ணாதுரை சுவாரஸ்யம்
சென்னை: சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3க்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்தும் கடந்த முறை நடந்த தவறிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் குறித்தும் சந்திரயான் 1 திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கியுள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இது சுற்றுப்பாதையை சென்றடைந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கருவி தரையிறங்காமல் நிலவிலேயே மோதி செயலிழந்தது.

இதன் பாகங்களை 2 மாதங்களாக இஸ்ரோவும் நாசாவும் தேடி வந்தன. ஆனால் சென்னையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தனது தொலைநோக்கி மூலம் ரோவரின் பாகங்களை கண்டறிந்தார்.
சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் ரூ 615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இந்த கவுன்ட்டவுன் என்பது எரிபொருளை சோதனை செய்வது, விண்கலத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா என சரி செய்வது, அதன் இயக்கத்தை கவனிப்பது போன்ற கடைசி நேர விஷயங்களை செய்வதுதான் கவுன்ட்டவுன் ஆகும். இந்த நிலையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவுக்கு சென்றுவிட்டால் இது இந்தியர்களுக்கு பெருமையான தருணமாகும்.
அந்த வகையில் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து மயில்சாமி அண்ணாதுரை விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இரண்டு பார்ரப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்.
பூமியிலிருந்து நிலவுக்கு அனுப்பக் கூடிய பயணம் முதல் கட்ட மாதிரி ஜிஎஸ்எல்வியிலிருந்து அனுப்புகிறோம். கிட்டதட்ட 200 கி.மீ. 36 ஆயிரம் கிமீ. மீள்வட்ட பாதையில் அனுப்பப்படும். நிலவு வரை எடுத்துச் செல்வதற்காக ஒரு கலன், அங்கு 100 கி.மீ. தூரத்தில் அது பிரியும். மெதுவாக இறங்கக் கூடியதில் பல மாற்றங்கள் சந்திரயான் 3இல் செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 இல் 5 இயந்திரங்கள் இருந்தது. ஆனால் அதில் பிரச்சினை இருக்கும் என்பதால் இந்த முறை 4 இயந்திரங்கள் தலா 800 திறன் கொண்டவை மட்டும் இருக்கிறது. ஏனென்றால் அதிக இயந்திரங்கள் இருந்தால் அதில் ஒன்று இயங்காவிட்டாலும் அதன் வேகத்திலும் திசையிலும் கோளாறுகளை உருவாக்கும்.
கடைசி நேரத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக 4 இயந்திரங்களில் 2 மட்டுமே இயங்கும் படி வடிவமைத்துள்ளோம். அது இறங்கி கீழேவரும் போது அதன் எடைக்கு தகுந்த விசை கொடுக்கும் போது மெதுவாக இறங்கிவரும். இந்த இரண்டில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அடுத்த இரண்டை இறக்கிவிடலாம்.
கடைசி நேரத்தில் வேகமாக இறங்கினாலும் அதன் 4 கால்களும் அதை தாங்கி பிடிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ரோவரின் வேகத்தை கணிப்பதற்காக இந்த முறை கூடுதல் சாதனங்களை பயன்படுத்துகிறோம். இரண்டில் ஒன்றில் பிரச்சினை வந்தாலும் இன்னொன்று இயங்கும்படி செய்துள்ளோம். இவை மோதினாலும் எங்கு மோதியது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் அவை புகைப்படம் எடுக்கும்படி செய்துள்ளோம்.
சந்திரயான் 3 இல் உள்ள ரோவர் எந்த இடத்தில் இறங்குகிறதோ அந்த இடத்தை நாங்கள் கண்காணிப்போம். அது இறங்கக் கூடிய இடத்தில் ஏதாவது ஒரு கல் இருந்தால் அதில் ரோவரின் ஒரு கால் படும். அப்போது என்னதான் மெதுவாக இறங்கினாலும் ரோவர் கவிழ வாய்ப்புள்ளது. அதனால் இந்த முறை அது போல் கற்களோ குழியோ இருந்தால் அந்த ரோவர் அதை கண்டறிந்து சற்று தள்ளி இறங்கும்படி செய்துள்ளோம்.
இதன் சிக்னல்கள் எல்லாமே பூமிக்கு வரும். வேகமாக இறங்கினாலும் கால் உடையாத வகையிலும் ஒரு இடத்தில் பிரச்சினை இருந்தால் வேறு இடத்தில் இறங்கலாம் இப்படி பல விஷயங்களை ஆய்வு செய்து தயார் செய்துள்ளோம். நாமக்கல் - திருச்செங்கோடு இடையே 100 டன் எடை கொண்ட கற்களை நிலவில் உள்ள மணலை போல் துண்டுகளாக்கி பரப்பி ரோவர் தரையிறங்குவதை சோதனை செய்துள்ளோம். நிலவின் தரைபகுதி எப்படி இருக்கும் அதற்கேற்ப எப்படி தரையிறங்க வேண்டும் என்பதையும் பெங்களூர் அருகே பரிசோதனை மூலம் பார்த்துவிட்டோம். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications