தேசிய அளவில் ரொம்ப முக்கியம்! ஸ்டாலின் பிளான் "நம்பர் 3".. கூட்டணிகளிடம் கறார்? அப்போ திருமா முடிவு?

முக்கிய விஷயங்களை மனதில் வைத்தே நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றி விடக்கூடாது என்கிற திட்டத்தில் தான், அதிமுகவுக்கு சாதகமாகவும் திமுகவை மறைமுகமாக சீண்டியும் சமீபகாலமாக பேசி வருகிறாராம் திருமாவளவன். அவரின் இந்த பேச்சுக்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.. விசிகவிற்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகள் பலர்.

நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருகிறார் மு.க.ஸ்டாலின். முக்கியமாக தமிழ்நாட்டில் இருப்பது போல மெகா கூட்டணி அமைய வேண்டும் என்றும் தேசிய அளவில் அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணியிலேயே கடந்த சில நாட்களாக சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

கூட்டணி

கூட்டணி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்த 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் இந்த முறை 30 சீட்டுகளில் திமுக களமிறங்க திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 10 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யவிருக்கிறது. கடந்த முறை காங்கிரசுக்கு மட்டுமே 10 சீட்டுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பெரிய அளவில் குறையலாம் என்கிறார்கள். இதில் காங்கிரசை தவிர மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் கூட்டணியில் தொடரலாம் ; இல்லையெனில் விலகிக் கொள்ளலாம் என்பதே திமுகவின் ரகசிய திட்டம்.

பிளான் என்ன?

பிளான் என்ன?

ஆக, சீட்டுகளின் எண்ணிக்கை, சின்னம், தொகுதி ஒதுக்கீடு ஆகிய 3 விசயங்களில் திமுக முன் வைக்கப்போகும் உறுதியான நிலை, கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். குறிப்பாக, கடந்த முறை சிறுத்தைகளுக்கு 2 சீட்டுகள் ஒதுக்கி அதில் திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்த முறை திருமாவளவனுக்காக 1 சீட் மட்டுமே ஒதுக்குவதாக, சீட் ஷேரிங் பேச்சு வார்த்தையில் துரைமுருகன் சொல்லுவார். இந்த முதல் அதிர்ச்சியை திருமாவுக்கு திமுக கொடுக்கும்.

திருமா

திருமா

இதனை ஜீரணிக்க முடியாமல் போனால் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை திருமா எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது அதனை ஜீரணித்துக் கொண்டு 1 சீட்டுக்கு திருமா ஒப்புக்கொண்டால் மீண்டும் சிதம்பரம் தொகுதியையே திருமாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், சிதம்பரத்திற்கு பதிலாக திருமா வேறு தொகுதியை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், கடந்த முறையே மிக மிக சொற்ப வாக்குகளில்தான் இழுத்துப்பிடித்துக் கொண்டு அவரால் ஜெயிக்க முடிந்தது. எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவையே அவர் எடுப்பார்.

சான்ஸ் உள்ளது

சான்ஸ் உள்ளது

அப்படிப்பட்ட ஒரு சூழல் வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்போதே அதிமுக கூட்டணிங்கிற சான்ஸ் எனக்கு இருக்கிறது என்பதை மறைமுகமாக திமுகவுக்கு உணர்த்த நினைத்தே திருமா அரசியல் செய்து வருகிறார். திருமாவின் மறைமுக உள்நோக்கத்தை திமுக தலைமை உணராமல் இல்லை. இதற்கு சில காரணம் இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி அந்த அந்த கட்சிகளுக்காக பெரும் தொகை செலவளித்து, தேர்தல் பணி செய்து ஜெயிக்க வைப்பதை விட அந்த இடத்தில் திமுக போட்டியிட்டு திமுகவை ஜெயிக்க வைக்கவே உளப்பூர்வமாக திமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். நேராடியாக திமுக எம்.பி.க்கள் 30 பேர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம்.

 வேறு மாதிரி பிளான்

வேறு மாதிரி பிளான்

மீண்டும் பாஜகவே மத்தியில் தனி பலத்துடன் ஆட்சி அமைத்து விட்டால், தென்மாநிலங்களை உள்வாங்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் செயல்திட்டமே வேறுமாதிரியாக இருக்கும். குறிப்பாக, தமிழ்நாட்டு அரசியலில் தங்களின் சுயரூபத்தை பாஜக காட்டும். அது திமுகவுக்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். அந்த நெருக்கடியை சமாளிக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு வலிமையான எம்.பி.க்கள் பலம் இருக்க வேண்டும் என தலைமை நினைக்கிறது. அதனாலேயே 30 இடங்களில் போட்டியிட திமுகவின் திட்டம். அதேபோல் காங்கிரஸ் சார்பாக ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்பதே திமுகவின் எண்ணமாம். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும். அதில் தவறு இல்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலினும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் உருவாகி, காங்கிரஸ் தலைமை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்றால் அப்போது ஸ்டாலினை பிரதமராக்கலாம் என்ற திட்டமும் திமுக வசம் உள்ளதாம்.

நெருக்கடி

நெருக்கடி

இதை மனதில் வைத்தே நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாம். கடந்த தேர்தலில் 20 இடங்களில் திமுக போட்டியிட்ட நிலையில் இந்த முறை 25 - 28 இடங்களில் கூட போட்டியிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை கொடுக்கலாம். அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு 1- 2 சீட் கொடுத்தாலும், அனைத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்ற திட்டத்திலும் இருக்கிறதாம். நாடாளுமன்றத்தில் தற்போது 3வது பெரிய கட்சி திமுகதான். அந்த ஸ்டேட்டஸை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். அதோடு தொங்குநாடாளுமன்ற உருவானால் அப்போது தங்களுக்கும் பவர் இருக்க வேண்டும் என்பதால் இத்தனை இடங்களில் போட்டியிட திமுக பிளான் செய்துள்ளதாம். அந்த வகையில் சிறுத்தைகள், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள். அதனால், திமுக கூட்டணி பலூன் உடையாது என்கிற பிம்பத்தை எங்கள் கட்சி தலைமை ஏற்படுத்தி வைத்திருந்தாலும் அந்த பலூன் தேர்தல் நெருக்கத்தில் உடையும்'' என்கிற தகவல்கள் திமுக தரப்பில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+