அடியோடு எல்லாம் மாறுதே! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! கட் ஆப் இதுதான்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான கட் ஆப் இந்த முறை குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. முன்பு இருந்ததை விட இந்த முறை குறைவான கட் ஆப் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மாற்றங்கள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை கடந்த சில நாட்களுக்கு முன் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது
மதிப்பெண் விவரம்: க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோருக்கு ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கடினமான கேள்விகள்: எப்போதும் கேட்பதை விட இந்த முறை கணிதத்தில் 2 கேள்விகள் கூடுதலாக இருந்தன.
அதேபோல் பொது அறிவு கேள்விகள் அதிக கடினமாக இருந்தன. 10 கேள்விகள் வேறு தரத்தில் இருந்தன . குரூப் 4 தேர்வு என்றாலும் அது குரூப் 2க்கு இணையாக சில கேள்விகள் குரூப் 1க்கு இணையாக கேட்கப்பட்டது. இந்த தேர்வு முன்பை விட கடினமாக இருந்ததால் கட் ஆப் குறையும் வாய்ப்புகள் கூட உள்ளன,
கட் ஆப் குறையுமா?: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படித்தான் வழக்கமாக மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இந்த முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண் குறைவாக வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications