துணை முதல்வரானதும் உதயநிதியின் முதல் கையெழுத்து எது தெரியுமா? முதல் பந்திலேயே சிக்ஸர்.. என்ன அது?
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்த பொறுப்பை ஏற்ற பிறகு அவரது முதல் கையெழுத்து தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து அதுபற்றி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை மொத்தம் 20 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
போட்டியை தொடங்கி வைத்த பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை 2024ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகளை இன்று உங்களின் முன்னிலையில் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமையடைகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் இங்கே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைவரையும் பார்க்கும்போது உங்களிடம் இருக்கும் உற்சாகம் அப்படியே என்னையும் தொற்றி கொள்கிறது.
துணை முதல்வர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கானது தான். இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவது தொடர்பான கோப்பில் தான் முதல் கையெழுத்திட்டேன் என்பதை நான் இங்கே பெருமையுடன் கூறி கொள்ள விரும்புகிறேன்.
இந்த சிறப்புக்குரிய நிகழ்வுக்கு 2 முக்கியமான வீரர்கள் வந்துள்ளனர். மாற்றுத்திறன் பேட்மிண்டன் வீராங்கனை தங்கை துளசிமதி முருகேசன் இங்கே வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர் தான் இவர். விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்பதற்கு சான்றாக செயல்பட்டு வரும் துளசிமதிக்கு பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக முதலமைச்சர் ரூ.2 கோடியை உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார்.
அதேபோல் திருவாரூரை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேலும் இங்கே வருகை தந்துள்ளார். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் யூத் ஒலிம்பிக்ஸ், ஏசியன் இன்டோர் சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ் 2023, ஒலிம்பிக்ஸ் 2024, காமன்வெல்த் கேம்ஸ் உள்ளிட்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றவர் தான் இவர். உங்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் ஹேண்ட் பால், கேரம், செஸ், பென்சிங், ஜூடோ, பாக்சிங், கோ- கோ, டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும் சேர்த்து இருக்கிறோம்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்துள்ள ஒவ்வொருவரும் இன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் இணைந்து உள்ளீர்கள். விளையாட்டினை நம்பி களம் நமதே என புறப்பட்டு வந்துள்ள உங்களின் கனவு வெல்ல திராவிட மாடல் கழக அரசு என்றைக்கும் துணை நிற்கும். இந்த திட்டத்தின் கீழ் நானே நேரில் சென்று 23 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான கிட் வழங்கி உள்ளேன்'' என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications