டெல்லி போகட்டும்.. ஓபிஎஸ்ஸுக்கு ‘அவங்க’ இருக்காங்களே.. அப்போ எடப்பாடி நிலை? இந்த 2 பாயிண்ட் தானாம்!
எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு பின்னடைவை ஏற்படுத்துமா என அலசுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கான வாய்ப்புகள், எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் பிரச்சனைகள், ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் குறித்தெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுடன் விவாதித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் பட்டாளமே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
சிறு சிறு கட்சிகள் கூட அதிமுகவை மதிப்பதில்லை என்ற தோற்றம் உருவாவது அதிமுகவுக்கு விழும் வாக்குகளை திசைதிருப்புமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தனது பார்வையை முன்வைத்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

அதிமுகவிற்கான வாய்ப்புகள்
1. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது.
2. மின் கட்டண உயர்வு விசைத்தறி தொழிலாளர்களை பாதித்திருப்பது அதிமுகவிற்கு சாதகமாகலாம். ஏனெனில் ஈரோடு கிழக்கில் விசைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
3.இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து கை சின்னம் நிற்கிறது. கடந்த கால தேர்தல் வரலாறுகளின்படி இரட்டை இலை vs கை வெற்றி சதவீதம் என்பது இரட்டை இலைக்கே அதிகமாக இருப்பது.
4. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பட்டியலின மக்கள் பற்றி கடந்த காலங்களில் பேசிய சர்ச்சை பேச்சுகள் தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு கை கொடுக்கலாம்.

அதிமுக சந்திக்கும் பிரச்சனைகள்
1. இடைத்தேர்தல்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவையே கொண்டிருக்கும் என்ற மனநிலை.
2. அதிமுக கவுண்டர்களுக்கான கட்சியாகி இருக்கிறது என்ற விமர்சனம் பிற சமூக மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கம்.
3. ஈரோடு கிழக்கில் தோல்வியடைந்தால் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை என்ற பிரச்சனை முன்னெடுக்கப்படலாம்.
4. இரட்டை இலை சின்னத்தில் நிற்பதால், எவ்வளவு வாக்கு பெற்றாலும், அது எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட செல்வாக்கு என்று சொல்ல முடியாத சூழல்.

2 பாயிண்ட் தான்
நாம் முன்வைத்த மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக தனது பார்வையை முன்வைக்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் முக்கியமாக கருதுவது 2 விஷயங்களைத்தான். 1. யார் ஆளுங்கட்சி? 2. ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் அடுத்த 3 வருடங்களுக்கு ஏதாவது நலத்திட்டங்கள் வருமா? இந்த மனப்பான்மையைத் தவிர வேறு எதையும் மக்கள் யோசிக்க மாட்டார்கள். இதைத் தவிர அதிமுகவுக்கு என்ன பலம்? அதிமுகவை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள்? என்கிற விஷயமெல்லாம் உள்ளேயே வராது. திமுகவும் அதிமுகவும் இணையாக பிரச்சாரம் செய்கிறது. இணையாக பணம் செலவு செய்கிறார்கள். இதை மீறி ஆளுங்கட்சிக்குத்தான் அதிக வெற்றி வாய்ப்பு இருக்கப்போகிறது. மற்றபடி, கட்சிகளின் பலம், பலவீனம் என எதுவுமே களத்தில் நிற்காது.

வாக்குறுதிகள் ஏற்படுத்தும் சிக்கல்
திமுக சில முக்கியமான வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்த பிரச்சாரம் பொதுத் தேர்தலில் தான் எதிரொலிக்கும், ஆட்சி முடிவடைய இன்னும் 3 வருடங்களுக்கு மேல் இருப்பதால் இப்போது இடைத்தேர்தலில் இந்த பிரச்சாரம் வொர்க் ஆகாது. மக்கள் கேட்கும் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவதாக ஆளுங்கட்சி உறுதியளிக்கும். மேலும், உள்ளூர் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஏதாவது இருந்தால் அதையும் இப்போதே தீர்த்து வைத்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதைத் தவிர பிரச்சாரத்திற்கு வலுவூட்டும் விஷயங்களாக அங்கிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, ரேஷன் பிரச்சனை, சாலை வசதி இல்லாதது போன்ற பிரச்சனைகள் எதிரொலிக்கலாம்.

ஸ்டாலின் vs தென்னரசு
அதைக் கடந்து காங்கிரஸ் சின்னம் vs அதிமுக சின்னம் போட்டியெல்லாம் அங்கு இல்லை. அங்கு நிற்பது முதலமைச்சர் ஸ்டாலின் தான், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்ற பார்வை தான் மக்களிடம் போய் நிற்கும். அதனால், இளங்கோவன் மீதான குற்றச்சாட்டுகள் கூட மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகள் எல்லாம் கூட, களத்தில் வழங்கப்படும் விஷயங்களால் மறக்கடிக்கப்படும்.

இடைத்தேர்தல் ஃபார்முலா
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரம் ஃபார்முலா, அதை மிஞ்சிய திருமங்கலம் ஃபார்முலா, அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு பணத்தை இறைத்து வருகிறார்கள். இந்த இடைத்தேர்தல் முடிந்தபிறகு, அந்த தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை கையில் வைத்திருப்பார்கள் என்ற நிலையைத்தான் இப்போது கணிக்க முடிகிறது.

உல்டா ஆகும்
ஈரோடு கிழக்கில் தோற்றால், கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரியும் என்று சொல்ல முடியாது. இப்போது கட்சி எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தோற்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்காலம் இல்லை, இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்காலம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தி அலை, நிர்வாக சீர்கேடுகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

கட்சி போட்டி
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவேன், இரட்டை இலை சின்னத்திற்காகப் போராடுவேன் என்று ஓபிஎஸ் அறிவிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளிப்பேன் என்று சொல்லிவிட்டார். இனி, அவரால் எனது ஆதரவு வாக்குகள் என எதையும் க்ளெய்ம் செய்ய முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரப்போகிறது. பொதுக்குழுவை எதிர்த்து முறையீடு செய்த நிலையில், அந்த பொதுக்குழுவுக்கே வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்கு மேல் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை கைப்பற்ற முடியாது.

ஓபிஎஸ் எதிர்காலம்
பாஜக, எடப்பாடி பழனிசாமியிடம் பேசி அதிமுகவில் பதவி பெற்றுத் தரலாம். அல்லது ஈபிஎஸ் அணியில் இருக்கும் தலைவர்கள், ஓபிஎஸ் பிரிந்திருந்தால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறி, ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ள வலியுறுத்தலாம். அப்படி அவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்பு இருக்கும். இல்லை என்றால் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் மிகச் சிக்கலாகத்தான் போய் முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் குபேந்திரன்.
-
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு












Click it and Unblock the Notifications