Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரிச்சி போடு".. ரேஷனில் "இதை" இன்னும் வாங்கலையா? மாதமாதம் வாங்கிடுங்க.. கடைகளில் கிளம்பிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து தமிழக அரசுக்கு போன கோரிக்கை என்ன?

தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள்.

What is the Huge Order by Tamil Nadu Government to the Ration Shops and what are the Penalties for Ration shop Employees

விநியோகம்: அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், ரேஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, ரேஷன்தாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் கடுமையை காட்டக்கூடாது என்றும் ரேஷன் ஊழியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர ரேஷன் கடை ஊழியர்களுக்கென்றே சில முக்கிய உத்தரவுகளையும், அறிவுரைகளையும் கூட்டுறவுத்துறை வழங்கி வருகிறது.

ரேஷன் கடைகள்: சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. எந்த காரணம் கொண்டும் பொருட்கள் ரேஷன் கடைகளில் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவிட்டிருந்தார்..

இதற்கு காரணம், ரேஷன் அட்டைதாரர்கள் சிலர், தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லையாம்.. இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.. இந்த பொருட்களை சிலர் கள்ளத்தனமாக விற்றுவிடுவதாகவும் புகார் கிளம்பவும், தமிழக அரசு இப்படியொரு கடிவாளத்தை போட்டிருந்தது.
விரல் ரேகை: அதேபோல, ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவிகளில், ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வேறு யாரையாவது தங்களுக்கு பதிலாக அனுப்பி, பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.. மற்றபடி அனைவருமே, கருவியில் கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிய வேண்டும்.. அப்படி பதியும்போது, 2 முறை சரியாக பதிவாகவில்லை என்றால், அடுத்த முறை தானாகவே பொருட்கள் வழங்க அனுமதிக்கும் வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கள்ளச்சந்தை: ஆனால், இதை பயன்படுத்தி, சில ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை வாங்கியதுபோல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்களாம். அதனால்தான், பிராக்சி முறையை பயன்படுத்தக் கூடாது என்றும் விரல்ரேகை சரியாக பதிவாகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உணவு துறை ஏற்கனவே ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது..

இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது, வாங்காத பொருட்கள் பதிவாகியிருந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கிலோ அரிசிக்கு, 25 ரூபாயும், பருப்பு, பாமாயிலுக்கு தலா, 75 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்போவதாக கூட்டுறவு துறை அறிவித்திருந்தது. ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு செல்லும்போது, உணவு பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தால், ஊழியர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

கூட்டுறவு சங்க அதிகாரிகள்: மேற்கண்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்ததன் மூலம், ரேஷன் கடை முறைகேடுகள் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளன.. எனினும், இதிலும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.. அதாவது இந்த அபராத தொகையை, ரேஷன் கடையை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் உடனடியாக வசூலிப்பது இல்லையாம்..

கடையில் இருப்பு சரியாக இருந்தாலும்கூட, "ஆய்வுக்கு வந்ததற்காக, 5 கிலோ அரிசி குறைவாக இருப்பதாக பதிவு செய்து கொள்கிறேன்' என்று சில அதிகாரிகள் சொல்லிவிடுகிறார்களாம். அபராதத்தை மாதந்தோறும் வசூலிக்காமல், 6 மாதம், 1 வருஷம் கழித்து மொத்த அபராத நிலுவை தொகையையும், உடனே ஒரே சமயத்தில் செலுத்துமாறும் நெருக்கடி தருகிறார்களாம்.

அபராத தொகை: திடீரென அவ்வளவு தொகை ஊழியர்களிடம் இருப்பதில்லை அதனால், வசூலிக்கும் அபராத தொகையை, மாத மாதம் வசூலிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது கோரிக்கை கிளம்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+