உடனே நிறுத்துங்க.. சீனுக்குள் வந்த இந்தியா! ஈரான் - இஸ்ரேல் மோதல்.. முக்கிய ஸ்டாண்ட் எடுத்த இந்தியா
சென்னை: ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த மோதல் தொடர்பாக இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த மோதலில்.. மற்ற மோதல்கள் போலவே இந்தியா அணி சேரா கொள்கையை கொண்டு உள்ளது.
எந்த நாட்டையும் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.. அதேபோல் இந்தியா யாரையும் எதிர்க்கவில்லை. இந்த மோதல் தொடர்பாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் அப்பகுதியின் அமைதிக்கே குந்தகம் விளைவிக்கும். அந்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

இரண்டு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், உரையாடல் மற்றும் ராஜதந்திர ரீதியான சமாதான முயற்சிகளை செய்யவும்.. நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தற்போது நடந்து வரும் பகைமையால்.. மோதலால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அப்பாவி பணயக் கைதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இது எந்த விதத்திலும்.. யாருக்கும் பயன் அளிக்காது என்று இந்தியா நிலைப்பாடு எடுத்துள்ளது.
மோதல்: ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டைல் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
சவூதி அரேபியா இந்த தாக்குதலை கண்டிக்கிறது. இஸ்ரேலிய நாட்டின் தாக்குதலுக்கு எங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில்.. உறுதியான நிலைப்பாட்டை நாடுகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
நெருக்கம்: ஏற்கனவே செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அந்த மொத்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது இஸ்ரேலுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக ஈரான் - சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை உலுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications