பதிவாளருக்கு பஞ்சப்படி + ஓய்வூதியம்.. புகையுது சேலம் பெரியார் யூனிவர்சிட்டி! திமுக அரசுக்கு கோரிக்கை
சென்னை: சுபநிகழ்ச்சிகளில் மொய் செய்யும்போது, 101 ரூபாய், 1001 ரூபாய் என்று ஒற்றை இலக்கத்தில் மொய்ப்பணம் தருகிறோமே ஏன் தெரியுமா? மொய்விருந்து நடத்துவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?
திருமணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் மொய் செய்வது தமிழர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், லட்சக்கணக்கில் மொய் செய்தாலும், ஒற்றை ரூபாயை அதனுடன் வைத்தே மொய் செய்யப்படுகிறது.

உலோக நாணயம்: இதற்கு காரணம், ஆரம்பத்தில் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லாததால், பொன், வெள்ளி போன்ற உலோக நாணயங்களை வைத்தே பணத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அதனால்தான், மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக தர ஆரம்பித்தார்களாம்.
அதற்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.. மொய்ப்பணமாக எவ்வளவு ரூபாய் கட்டுக்களை தந்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தை வைத்து தருவதை வழக்கமாக கடைப்பிடித்திருக்கிறார்கள். பிறகு நாளடைவில், மொய்ப்பணத்தில், 101, 501, 1001 என்று ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இரட்டை இலக்கு: இதற்கு வேறு காரணமும் சொல்கிறார்கள்.. அதாவது, மொய் எழுதும்போது, 100, 1000 என்று இரட்டை இலக்கமாகவே இருப்பதால், கவனக்குறைவு ஏற்படலாம்.. இதுவே 1 ரூபாய் சேர்த்து மொய் எழுதும்போது, மொய் செய்தவரின் தொகை மறக்காமல் இருக்கும்..
அதுவும் இல்லாமல், ஒற்றைபடை எண்கள் பொதுவாகவே விசேஷமான எண்கள் என்பதாலும், சென்ட்டிமென்ட் நம்பராகவும் கருதப்படுவதால், ஒற்றை இலக்கத்தையே மொய்ப்பணத்தில் கடைப்பிடித்து வருகிறார்களாம்.
தம்பதி: அதுமட்டுமல்ல, 100, 200, 500 என்று முழுமையான தொகை கொண்ட ரூபாய் நோட்டுக்களை தரும்போது, சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட எண்ணாக தோன்றிவிடும்.. எவ்வளவு தொகை மொய் செய்தாலும் அதை இரண்டாக பிரித்துவிட முடியும்.. ஆனால், அதனுடன் 1 ருபாய் சேர்த்தால் எளிதில் பிரிக்க முடியாது.. அதுபோலவே, தம்பதிகள் எளிதில் பிரியாதவண்ணம் வாழ வேண்டும் என்பதற்காகவே, இந்த 1 ரூபாய் சேர்க்கப்படுகிறது...
சுபநிகழ்ச்சிகளில் மொய் செய்தாலும் இதே கணக்குதான்.. 101, 201, 501 என்று உள்ள எண்களை, எந்த எண்ணால் வகுத்தாலும் மீதம் வரும்.. அதுபோல, உறவுமுறை முடிவில்லாமல் என்றும் தொடரும் என்று மறைமுகமாக உணர்த்தவே, 1 ரூபாய் இணைத்து தரப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், மொய் செய்பவருக்கும், மொய் பெறுபவருக்கும் என இரு தரப்புக்குமே உறவு நீடிக்கும் விதமாகவே, 101 501 1001 ரூபாய்களை ஒற்றைப்படையில் தருகிறார்களாம்.. இதனால், உறவுகள் வளர்ந்து கொண்டே செல்லும் என்று வலுவாக நம்பப்படுகிறது.
வட்டியில்லா கடன்: இந்த மொய் விருந்தின் நோக்கம் என்ன தெரியுமா? இந்த மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உறவினர்களுக்கு உதவிடும் வகையிலும் நடத்தப்படுவதாகும்.. அதாவது பண தேவைக்காக யாரிடமும் வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவும் என்கிற நோக்கத்தில் இது துவங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித்தேவைக்கு இந்த மொய்ப்பணம் செய்யும் உதவிக்கு ஈடுஇணையே கிடையாது.. வட்டியில்லா முதலீடு இதுவாகும்.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் பகிரும் அன்பு..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications