‛‛கிளாம்பாக்கம்’’.. பெயர் காரணம் தெரியுமா? 1000 ஆண்டு பழமையான வரலாறு இதுதான்.. சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கத்துக்கு எப்படி கிளாம்பாக்கம் என்ற பெயர் வந்தது? அதன் பின்னணி பற்றி இந்த செய்தியில் அறிவோம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களின் பெயர்களுக்கும் பின்னாலும் அதற்கான பெயர் காரணம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம்மில் பல பேருக்கும் அந்த காரணம் என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்.

What is the meaning of Kilambakkam details here


ஆனால் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் வசிக்கும் ஊரின் பெயருக்கு பின்னால் இருக்கும் உண்மை நமக்கு நிச்சயம் தெரியும். அந்த வகையில் சமீபகாலமாக தமிழ்நாட்டில் நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர் தான் இந்த கிளாம்பாக்கம்.

அதாவது சென்னை புறநகர் பகுதியான இந்த கிளாம்பாக்கம் தான் சமீப காலமாக ‛டாக் ஆப் தி டவுன்’ ஆக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பஸ் முனையம் தான். அதாவது சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பதில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பணி இந்த ஆண்டு தொடக்கத்தில் முழுவதுமாக முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது இங்கிருந்து தான் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்று வர பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு தான் செல்ல வேண்டும். கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் முனையத்துக்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் உள்ளது. ஒரு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

அதாவது சென்னையில் போக்குவரத்து நெரிசலை கிளாம்பாக்கம் பஸ் முனையம் குறைத்துள்ளதாக கூறி ஒரு தரப்பு வரவேற்றாலும் கூட, இன்னொரு தரப்போ சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் கிளாம்பாக்கம் வந்து பஸ் ஏறி பயணிக்க வேண்டி உள்ளது. இது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் தொடர் விடுமுறை காலங்களில் கிளாம்பாக்கம் பஸ் முனையம் பேசும் பொருளாகி விடுகிறது.

அந்த வகையில் தற்போது லோக்சபா தேர்தல் விடுமுறைக்கு பலரும் சொந்த ஊர் சென்ற நிலையில் மீண்டும் கிளாம்பாக்கம்.. கிளாம்பாக்கம்.. என்ற சொல்லை நாம் செய்தி சேனல்களில் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. சரி இது இருக்கட்டும். இனி கிளாம்பாக்கத்துக்கு, கிளாம்பாக்கம் என்ற பெயர் எப்படி வந்தது? என்று பார்ப்போம். அதாவது இந்த கிளாம்பாக்கம் என்பது 1000 ஆண்டு பழமையான வரலாற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையின் புறநகர் பகுதியாக உள்ள கிளாம்பாக்கம் என்பது இதற்கு முன்பு தொண்டைநாட்டின் ஒருபகுதியாக இருந்துள்ளது.

தொண்டை நாடு என்பது 4ம் நூற்றாண்டில் இருந்து 9ம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்து பல்லவர்களின் தாய்நாடாக இருந்தது. அதன்பிறகு பிற்பகால சோழர்கள் தொண்டை நாட்டை கைப்பற்றினர். அப்போது சோழ மண்டலமாக மாற்றப்பட்டது. சோழ மண்டலம் என்பது 24 கோட்டங்களாகவும், 79 நாடுகளாகவும் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு கோட்டம் தான் புலியூர் கோட்டம். இந்த கோட்டத்தில் நெடுங்குன்றம் என்பது நாடாக ருந்தது. இது நெடுங்குன்றத்தை தலைநகராக கொண்டு செயல்பட்டது. இந்த நெற்குன்ற நாட்டின் ஒரு சிற்றூராக இருந்த ‛களாம்பாக்கம்’ என்பது தான் தற்போது ‛கிளாம்பாக்கம்’ என அழைக்கப்படுகிறது.

அதாவது தமிழகத்தை எடுத்து கொண்டால் பொதுவாக ஊர்களின் பெயர்கள் என்பது அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் தொழில், அங்குள்ள மரம், செடி, கொடி, நீர்நிலைகள், மலை, வரலாற்று நிகழ்வு, செல்வாக்கு மிக்க நபர்கள், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்களின் பெயர்களின் அடிப்படையில் தான் வைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் கடலுக்கு அருகே இருக்கும் நிலப்பரப்பு என்பது பாக்கம் என அழைக்கப்படுகிறது. அதேபோல் தற்போது நாம் அழைக்கும் ‛கிளாம்பாக்கம்’ பகுதியில் முன்பு களாச்செடிகள் அதிகமாக செழித்து வளர்ந்துள்ளன. இதனால் களாச்செடிகள் நிறைந்த பாக்கம் என்பதை சுருக்கமாக களாம்பாக்கம் என அழைத்துள்ளனர். இந்த களாம்பாக்கம் தான் நாளடைவில் மருவி கிளாம்பாக்கம் என மாறியதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+