Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரூ.50,000 இல்லனா கல்யாணமே பண்ணாத.." கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா இருக்கே! ஆனந்த் சீனிவாசன் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கொடுக்கும் பொருளாதார டிப்ஸ்கள் எப்போதும் பேசுபொருள் ஆகும். அவர் சொல்வது ஏற்கவே முடியாதது போலத் தெரிந்தாலும் கூட சற்று யோசித்துப் பார்த்தால் அது சரி என்றும் அதைச் செய்தால் பிரச்சினை வராது என்பதும் தெரியும். இதற்கிடையே சென்னையில் மாதம் ரூ.50,000 சம்பளம் இல்லாமல் கல்யாணம் செய்வது ஏன் சிக்கலான ஒன்று என்பதை விளக்கியிருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் மக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்.. எப்படித் தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆலோசனை கொடுத்து வருபவர் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். சுற்றிச் சுற்றி இவர் சொல்லும் விஷயங்கள் எளிமையானது தான். கடன் வாங்கக்கூடாது, தேவையில்லாத செலவுகளைச் செய்யக்கூடாது என்பது தான். ஆனால், அதுவே நமக்குப் பெரிய விஷயம் போலத் தெரிகிறது.

Anand Srinivasan saving investment

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில் ஆனந்த் சீனிவாசன் மிடில் கிளாஸ் பட்ஜெட்டை கட்டம் கட்டமாக விளக்கியிருக்கிறார். அதில் ஒரு குடும்பத்திற்கு ரூ.50,000 சம்பளம் இல்லை என்றால் சென்னையில் திருமணமே செய்ய முடியாது எனச் சொல்லி இருக்கிறார். இதற்காக அவர் ஒரு பட்ஜெட்டை கணக்கையும் போட்டுள்ளார்.

எல்லாரும் செய்யும் தவறு

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "நாம் எல்லாவற்றையும் உடனடியாக அடைய வேண்டும் என நினைக்கிறோம் அதுதான் பெரிய தவறு. எனது அலுவலகத்தில் அனைவருக்கும் சராசரியாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 35,000 வரை தான் சம்பளம். ஆனால், எத்தனை புல்லட்.. எத்தனை கேடிஎம் பைக்குகள் இருக்கிறது தெரியுமா.. யாராவது லோன் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைக்கிறீர்கள். யாரோ சொல்வதைக் கேட்கக்கூடாது. உங்களுக்குப் புத்தி வேண்டும். வேலையும் வருமானமும் நிரந்தரம் என நினைக்கிறோம். அது தவறு!

ஒருவருக்கு மருத்துவக் காப்பீடு கண்டிப்பாக இருக்க வேண்டும். தங்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு தான் எல்லாமே.. சென்னையில் போதிய பொதுப் போக்குவரத்து இருக்கிறது. பஸ்ஸிலேயே போகலாம்! இப்போதும் சொல்கிறேன். ரூ.50,000 இல்லை என்றால் கல்யாணமே பண்ண வேண்டாம். சென்னையில் கணவன்- மனைவி மற்றும் இரு குழந்தைகள் ரூ.50,000 சம்பளம் இல்லாமல் சென்னையில் இருக்கவே முடியாது.

தலைச் சுற்றும் பட்ஜெட்

வாடகை ரூ.15,000 வரும். வீட்டின் மெயின்டனன்ஸ் செலவுக்கு ரூ.1000 தருவோம். இதிலேயே ரூ.16,000 காலி.. ஒரு குழந்தைக்கு மாதம் ஸ்கூல் பீஸ், வேன் பீஸ் உட்பட மற்றவற்றைச் சேர்த்தால் அந்தச் செலவே ரூ.9000 வரை வரும். இரு குழந்தைகள் என்றால் ரூ.18,000. மின்சார பில் ரூ.1,000. இணையத்திற்கு ரூ.2000. தண்ணீருக்கு ரூ.2000. பெட்ரோல் செலவு ரூ.4000.. டூவீலருக்கு வண்டிக்கு இஎம்ஐ ஒரு ரூ.4000. இதைச் சேர்த்தாலே ரூ.45,000ஐ தாண்டிவிடும். இன்னும் பால், துணி, மளிகைப் பொருள், வெளியே செல்வது என்று தனியாகச் செலவுகள் இருக்கிறது. இதையும் சேர்த்தால் ரூ.65,000 வரும்.

இதில் புல்லட் வேண்டாம் எனத் தூக்கினால் ஒரு ரூ.8,000 கம்மி ஆகும். ஒரு குழந்தை போதும் என நினைத்து, புல்லட் வேண்டாம் என்றால் கூட ரூ.45,000 செலவாகும். இறுக்கிப் பிடித்தால் ரூ.50,000க்குள் செலவை முடிக்கலாம். அப்போது தான் குழந்தையை நல்ல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கலாம். அதுபோக கையில் ஒரு ரூ.6,000- ரூ.7,000 நிற்கும். இதுதான் ரியாலிட்டி.!

தீர்வு என்ன

அதேநேரம் கணவன்- மனைவி இருவரும் வேலை செய்தால் ஈஸியாக ரூ.80,000- ரூ.90,000 வருமானம் வந்துவிடும். ஏன் ஒருவர் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இருவரும் சம்பாதித்தால் ஈஸியாக ரூ.80,000 வந்துவிடும். ஆனால், நீங்கள் ராஜா போலப் படுத்துக் கொண்டே பெண் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என நினைத்தால் வேலைக்கு ஆகாது. நீங்களும் பாதி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+