Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெரிய தப்பு!" கோலி கேரியரே முடிய போகுது! இது செம லேட்! பாயிண்டை பிடித்த ஆனந்த சீனிவாசன்! என்னவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் போட்டிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் பெங்களூரைச் சென்னை வீழ்த்தியது. இதற்கிடையே பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், கோலி குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அது என்னவென்று பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டியில் இப்போது லீக் சுற்று நடந்து வருகிறது. இந்தாண்டு ஒவ்வொரு லீக் போட்டியும் கடைசிக் கட்டம் வரை சென்று நம்மை எகிற வைக்கிறது. நேற்று பெங்களூர்- சென்னை போட்டியும் இதில் விதிவிலக்கு இல்லை.

What is the mistake done by Virat Kholi explains Anand Srinivasan Amid IPL 2023

சென்னை அணி முதலில் 226 ரன்களை எடுத்த நிலையில், அதன் பின் பெங்களூர் தனது பேட்டிங்கை தொடங்கியது. இருப்பினும், அடுத்தடுத்து அவர்கள் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறினர்.

ஐபிஎல் போட்டி: அதன் பின் வந்த பெங்களூர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய நிலையில், போட்டி கடைசி ஓவர் வரை வந்தது. இந்தப் போட்டியில் சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி இந்தப் போட்டியில் 6 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்தது. இதற்கிடையே பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், கோலி குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அது என்னவென்று பார்க்கலாம்.

நட்சத்திர கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான விரட் கோலி சமீபத்தில் ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தன்னிடம் இருந்து பல சொகுசு கார்களை விற்றுவிட்டதாகப் பதிவிட்டிருந்தார். மேலும், impulsive buying காரணமாகவே இத்தனை பொருட்களையும் வாங்கியதாகவும் இப்போது அவற்றை விற்றுவிட்டதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்குப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் எளிமையாக விளக்கியுள்ளார்.

ஏன் அப்படி: அவர் கூறுகையில், "கோலியிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தது. பணம் இப்படிக் கொட்டி கிடந்ததால் காரை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னரே, அதை வீட்டிற்குக் கொண்டு வந்து நிறுத்துவிட்டார். அதில் பல கார்களை அவர் பயன்படுத்தியதே இல்லையாம். இதற்குப் பெயர் தான் impulsive buying. அதாவது உடனடியாக ஒன்றை வாங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

கடையில் இருக்கும் பொருள் நமக்குத் தேவைப்படுமா இல்லையா என்று தெரியும் முன்னரே, பணம் இருக்கிறது என்பதற்காக அதை வாங்கிவிடுவது தான் impulsive buying. கோலி பெரிய கோடீஸ்வரர் என்பதால் அவருக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், 15000 சம்பளம் வாங்கும் ஒருவர் 20 ஆயிரம் கொடுத்து மொபைலை வாங்கி, அதை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவதும் கூட impulsive buying தான். பார்த்தவுடன் பொருளை வாங்க வேண்டும் என்று நாம் நினைப்பதாலேயே இது நடக்கிறது.ஏன் செய்கிறோம்: காசே இல்லை என்றாலும் பொருளை இஎம்ஐ-இல் வாங்க வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆனால், ஒன்றை நாம் புரிந்து கொள்வதில்லை. கார் உட்பட எந்த பொருளாக இருந்தாலும், கடையில் இருந்து நம்மிடம் வந்துவிட்டாலேயே அதன் மதிப்பு குறைந்துவிடும். குறிப்பாக காரின் விலையெல்லாம் 50% வரை குறைந்துவிடும். 15 கோடி காரை கோலியால் 7 கோடிக்குக் கீழ் தான் கிடைத்திருக்கும். சில நேரங்களில் 30% தான் செல்லும். வாங்கிவிட்டு ஏன் வாங்கினோம் என்று தோன்றுவார்கள்.

நமக்கு வேண்டுமா வேண்டாமா என்று கூட தெரியாமல் வாங்குவதாலேயே இப்படி நடக்கிறது. இதுதான் impulsive buying.. நமது மூளையில் நடக்கும் ரசாயன மாற்றம் தான் இதற்குக் காரணம். அதிகம் ஷாப்பிங் செய்பவர்கள், மொபைல் அடிக்கடி மாற்றுவோருக்கு இப்படி தான் இருக்கும். கிக்கிற்காக அவர்கள் இப்படிச் செய்வார்கள். படத்தை முதல் நாள் பார்த்தாலும் அதே படம் தான். 10 நாள் கழித்துப் பார்த்தாலும் அதே படம் தான். ஆனால், முதல் நாளே பார்க்க வேண்டும் என நாம் பல ஆயிரம் செலவழிக்கிறோம். இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

இதைத்தான் நாம் எதிர்க்க வேண்டும். உடனடியாக பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் நடந்த ஆய்வு ஒன்றில் பொருட்களை உடனடியாக வாங்காமல் பொறுமையாக வாங்குவோரே வாழ்க்கையில் வெற்றிகரமாக இருந்ததாகக் கூறுகின்றனர். வாழ்க்கையில் எப்படி கடினம் என்றாலும் அவர்களால் மீண்டு வந்துவிட முடியும். இதைத் தான் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

What is the mistake done by Virat Kholi explains Anand Srinivasan Amid IPL 2023

லேட்டா புரிஞ்சு இருக்கு: கோலிக்கு இப்போதுதான் இது புரிந்துள்ளது. அவருக்கு இப்போது 34 வயது. இன்னும் சில ஆண்டுகள் தான் கிரிக்கெட் விளையாடுவார். தனக்குத் திருமணமாகி பெண் இருக்கிறது, தனது குடும்பத்தினரும் தன்னை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பது இப்போது தான் புரிகிறது. இப்போது அவர் ஆண்டுக்கு 100 கோடி சம்பாதிக்கலாம். ஆனால், இப்படி ஆண்டு முழுக்க சம்பாதிக்க முடியாது என்பதை இப்போது கேரியர் முடிவில் தான் கோலி உணர்ந்துள்ளார். இது மிக மிக நல்லது.

இதில் நாமும் சிக்காமல் இருக்க ஒரே வழிதான். அதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று விரும்பினால்.. அதற்குக் காசு இருக்கா எனப் பாருங்கள்.. அந்த பொருளை வாங்கக் காசு இல்லை என்றால் அது குறித்து யோசிக்கக் கூட வேண்டாம். அப்படியே மறந்துவிடுங்கள். சில மாதங்கள் காசை சேர்த்து வைத்து அதை வாங்குங்கள். அதுதான் ஒரே தீர்வு" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+