இதுதான் புது பார்முலா.. 40 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் இதை செய்தால் செட்டில் ஆகலாம்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ஆனந்த் சீனிவாசன் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த காலத்தில் சம்பாதிப்பதைக் காட்டிலும் சேமிப்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. 100 ரூபாய் சம்பாதித்தால் 120 ரூபாய்க்குச் செலவு செய்யும் மோசமான போக்கு தான் இப்போது இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்கும் போது நடுத்தர வர்க்கத்தினர் எப்படிச் சேமிக்க வேண்டும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து விளக்கி வருகிறது. இதற்கிடையே அவர் இப்போது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் மேலும் ஏழைகளாக மாறும் சூழலே இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் 10 ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் அதில் 3 ரூபாயைச் சேமிக்க வேண்டும். குறிப்பாக நீண்ட கால முதலீட்டில் அதைப் போட வேண்டும்.
முன்பு நான் 400 கிராம் தங்கத்தைச் சேமிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், இப்போது விலை எல்லாம் ஏறிவிட்டது.. இன்னும் கூட அதிகரிக்கும். எனவே 200 கிராம் தங்கத்தை வாங்கி சேமித்து வையுங்கள். இதுதான் புது பார்முலா.. 400 கிராம் வேண்டாம் 200 கிராம் தங்கத்தை வாங்கி சேமித்து வைக்க வேண்டும்.
ஏனென்றால் நான் 400 கிராம் என்று சொன்ன போது தங்கம் விலை ரூ. 6000 என்ற ரேஞ்சில் இருந்தது. ஆனால், இப்போது தங்கம் விலை ரூ. 6000க்கு வந்துவிட்டது. எனவே, 400 கிராமை 200 கிராமாகக் குறைத்துக் கொள்ளலாம். இதை டிஸ்கவுண்ட் என்று நினைக்க வேண்டாம். உங்கள் கைகளில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதையே இது காட்டுகிறது.
அதாவது நான் அப்போது 400 கிராம் தங்கத்தை வாங்கக் கூடிய பணத்தை வைத்து இப்போது நம்மால் வெறும் 200 கிராமை மட்டுமே வாங்க முடிகிறது. இப்போது நீங்கள் 200 கிராம் தங்கத்தை வாங்கவில்லை என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் அது 50 கிராம் ஆகிவிடும். ஏனென்றால் அடுத்த 1,5 ஆண்டுகளில் தங்கம் விலை கிராமுக்கு 1500 ரூபாய் வரை அதிகரிக்கப் போகிறது.
எனவே, உங்களின் எமர்ஜென்சி பணம் என்பது வங்கியில் இருக்கக் கூடாது. ஏனென்றால் வங்கியில் பணம் இருந்தால் விலைவாசி அதிகரிக்கும் வேகத்தில் அது கரையவே செய்யும். அதாவது தண்ணீரில் சர்க்கரையைப் போடுவது போலத் தான் இது. சர்க்கரையைத் தனியாகச் சேமித்து வைக்க வேண்டும். அந்த சேமிக்கும் இடம் தான் தங்கம்.
இது பாதுகாப்பாக மட்டும் இருக்காது. அதன் மதிப்பும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். கோல்ட் பீஸ் (gold bees) ஆக இருந்தால் தங்கத்தை விற்றுவிடலாம். தங்க நகையாக இருந்தால் அதை வைக்கவும் முடியும்.. விற்கவும் முடியும். எனவே, எமர்ஜென்சி பணம் என்பது தங்கமாகவே இருக்க வேண்டும்.
மேலும், உங்கள் செல்வத்தை அதிகரிக்க ஒரு சிப் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் 40 வயதுக்குக் கீழ் இருந்தால் கண்டிப்பாக அதை ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நல்லது. எனவே 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இதை மறக்க வேண்டாம்" என்று அவர் கூறினார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications