"நியாயம் கிடைக்கவில்லை" அரசின் அறிவிப்பை ஆராய வேண்டியுள்ளது.. அடுத்த நடவடிக்கை பற்றி ஆசிரியர்கள்!
சென்னை: சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 6ம் நாளாக தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பு குறித்து ஆராய வேண்டி உள்ளதாகவும், அதன் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என இரு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.

6ம் நாளாக தொடரும் போராட்டம்
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
அந்த அறிக்கையில், நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள். இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் பெயரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குழு அமைத்த அரசு
இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரைகளை சம வேலை சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடுங்கள். மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய வேண்டியுள்ளது
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சம வேலை சம ஊதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு குறித்த அரசின் அறிவிப்பை ஆராய வேண்டியுள்ளது. அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழு அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சரியான முடிவு தேவை
தொடர்ந்து, சம ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடியும் எங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை. இதுவரை மூன்று குழுக்களை சந்தித்துள்ளோம். எந்த குழுவிலும் எங்கள் கோரிக்கைக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் சம ஊதியம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications