நேரம் இல்லை.. அவசரம்! செந்தில் பாலாஜி வேகமாக நகர்த்தும் "காய்".. இப்படி ஒரு பிளானா.. அப்போ திமுக?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் சட்ட ரீதியாக அவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறாராம். முக்கியமாக பெயில் வாங்குவது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை: அதன்பின் நீண்ட சட்ட போராட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3000பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நீட்டிப்பு: இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

பிளான் என்ன?: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் சட்ட ரீதியாக அவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறாராம். முக்கியமாக பெயில் வாங்குவது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம். அதன்படி விரைவில் பெயில் பெறுவதற்காக சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுக செந்தில் பாலாஜி முடிவு எடுத்துள்ளாராம்.
அதன்படி செந்தில் பாலாஜி விரைவில் புதிய மனுவை தாக்கல் செய்வார் என்கிறார்கள். செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வர விரும்புகிறாராம். அவரின் உடல்நிலை சரியில்லை, லோக்சபா தேர்தல் நெருங்குகிறது உள்ளிட்ட அவசர காரணங்களால் வெளியே வருவதற்கு செந்தில் பாலாஜி முயன்று வருகிறாராம்.
இதனால் தனியாக தனது வழக்கறிஞர் மூலமே அவர் ஜாமீன் மனு போடுவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் திமுகவும் தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் கூடுதலாக வேறு ஒரு மனுவை ஜாமீன் வேண்டி போடும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications