மன்னிப்பு கேட்காத அண்ணாமலை.. அடுத்தகட்ட ‘ஆக்ஷன்’ என்ன? “தலை சொன்னதும்..” ஆர்.எஸ்.பாரதி பதில்!
சென்னை : திமுகவினரின் சொத்து என அண்ணாமலை ஒரு பட்டியலை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீஸுக்காக காத்திருக்கிறோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

திமுக மறுப்பு : அண்ணாமலையின் இந்த குற்றாச்சாட்டை திமுக முற்றிலுமாக மறுத்தது. அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதுமே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். "திமுகவினர் சொத்து குறித்து வெளியிட்ட செய்தி உண்மை. திமுகவினர் மீதான புகாருக்கு ஆதாரம் இருக்கிறது. இதில் மன்னிப்பு கேட்க மாட்டேன். இழப்பீடும் வழங்க முடியாது. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்" என்று தெரிவித்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கை : இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்..எஸ்.பாரதி, "அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தனிப்பட்ட முறையில் திமுக பிரமுகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் அண்ணாமலையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் வக்கீல் நோட்டீஸ் வந்து சேரவில்லை. வக்கீல் நோட்டீஸ் முழுமையாக வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
அவதூறு வழக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகின்றன. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீஸுக்காக காத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications