இந்த வீடியோ மட்டும் இல்லைனா என்னாகி இருக்கும்? தோனி எடுத்த முடிவு! அப்படியே மாறிய சிஎஸ்கே எதிர்காலம்
சென்னை: சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தையே மாற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது.
சிஎஸ்கே பவுலர் மதீஷ் பதிரனா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். சிஎஸ்கே அணியின் பவர் பிளே பவுலிங் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்து அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்து வருகிறார்.
முக்கியமாக இந்த தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் பவுலர் மதீஷ் பதிரானாவிடம் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த தொடர் முழுக்க பதிரானா வீசிய ஓவர்களில் அவரிடம் தோனி அன்பாக நடந்து கொண்டு வழி நடத்தினார். நண்பர் போல தோலில் கை போட்டு ஆலோசனை செய்து வழி நடத்தி வருகிறார்.
முக்கியமாக டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என்று அன்பாக அருகில் சென்று ஆலோசனை வழங்கி வருகிறார். சின்ன குழந்தைக்கு பாடம் எடுப்பது போல பதிரானாவிற்கு தோனி பாடம் எடுத்தார்.
பதிரானா டெத் ஓவர்களில் சிறப்பாக வீசிய போது அவரிடம் டீச்சர் போல அருகே நின்று எப்படி வீச வேண்டும் என்று தோனி அறிவுரை வழங்கினார். அதை போலவே பதிரானாவும் பவுலிங் செய்ய.. சிஎஸ்கேவின் வெற்றிக்கு அது காரணமாக அமைந்தது.

பதிரானா வந்த பின் சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. முக்கியமாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே சிறப்பாக, பிரஷர் இல்லாமல் பவுலிங் செய்ய தொடங்கி உள்ளது.
இதற்கு முன் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு இருந்த பிரஷர் பதிரானா வந்த பின் இல்லை. இவர் இலங்கை அணிக்கு சிறந்த எதிர்காலமாக இருப்பார். இலங்கை அணிக்காக டி 20 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடுவார்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் குறைவாக ஆட வேண்டும். மாறாக டி 20 போட்டிகளில் அதிகமாக ஆடி அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் தோனி இவருக்கு நேரடியாக சப்போர்ட் கொடுத்து வருகிறார்.
அவர் மீது கைபோட்டு.. தோனி சில நிமிடங்கள் ஆலோசனை வழங்கினார். இளம் வீரர் ஒருவரின் பவுலிங்கில் இவ்வளவு நம்பிக்கை கொண்டு, அவருக்கு தோனி ஆலோசனை வழங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
20 வயதே ஆன இளம் வீரர் ஒருவர் 41 வயது லெஜண்டிடம் இருந்து நேரடியாக இப்படி ஆலோசனைகளை பெறுவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
This is the Video MS Dhoni saw and decided to Pick Pathirana in CSK squad .pic.twitter.com/788jdEe2Nm
— MAHIYANK ™ (@Mahiyank_78) May 9, 2023
வீடியோ : இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தையே மாற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது. இவர் இலங்கை அண்டர் 19 அணியில் பிரபலம் ஆகும் முன்பே சிஎஸ்கே அணியால் வலை பயிற்சியில் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டுவிட்டார்.
அப்போது இவர் உள்ளூர் தொடர் ஒன்றில் பவுலிங் செய்த வீடியோ வைரலானது. மலிங்கா ஸ்டைலில் இவர் பவுலிங் செய்தது மட்டுமின்றி விக்கெட்டும் எடுத்தார். அந்த விக்கெட்டை பார்த்துதான் சிஎஸ்கே கேப்டன் தோனி சிஎஸ்கே அணியிடம் இவரை எடுக்கும்படி கூறினார்.
அதோடு தோனியும் இதற்காக கடிதம் எழுதினார். இந்த நிலையில்தான் பதிராணா சிஎஸ்கே அணிக்கு கடந்த வருடம் நெட் பவுலிங் செய்ய வந்தார்.
இந்த நிலையில் இந்த வருடம் முகேஷ் சவுத்தரி இல்லாத நிலையில், சாகர் பாதி தொடர் ஆடாத நிலையில், பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யாத நிலையில் கூட சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.
அந்த ஒரு வீடியோதான் இவரின் எதிர்காலத்தையும் .. இந்த சீசனில் சிஎஸ்கேவின் எதிர்காலத்தையும் மாற்றி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications