விஜய் வசந்த்.. துரை வைகோ.. கார்த்தி! டிக் அடிக்கப்பட்ட பெயர்கள்! ஸ்டாலின் அசுர வேகம்.. அப்போ அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக் சபா தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சிலர் ஏற்கனவே டிக் அடிக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்றன நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

What is the plan of DMK MK Stalin in seat sharing and candidate selection for the Lok Sabha election 2024

இதில் லோக்சபா தேர்தல் பற்றி பேசிய ஸ்டாலின், தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லோக்சபா தேர்தல் பணிகள் பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். பூத் கமிட்டிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டிக்கு சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள். லோக்சபா தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40க்கு 40 நம்முடைய இலக்கு. அதற்கான பணிகளை இப்போதே செய்திடுங்கள்.

எனக்கு தேர்தல் பணிகள் சுணக்கம் குறித்து எந்த புகாரும் வரக்கூடாது. கவனமாக பணிகளை செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

சிங்கிள் பிளான்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது.

மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை போட்டியிட்டதை விட லோக்சபா தேர்தலில் 25- 26 இடங்களில் போட்டியிட திமுக மேலிடம் திட்டமிட்டு உள்ளதாம்.

இதற்கான ஆய்வு பணிகளை செய்து வருகிறதாம். இந்த நிலையில்தான் 2024 லோக் சபா தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சிலர் ஏற்கனவே டிக் அடிக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் யார் வேட்பாளர்கள்?: அதன்படி தென் சென்னை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படலாம். இவர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருதுநகர் துரை வைகோவிற்கு தரப்படலாம். ஆனால் இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+