ஆஹா.. உதயநிதி ஸ்டாலின் பிளானே வேறயாமே.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.. குட்நியூஸ்!

இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

 விளையாட்டு துறை

விளையாட்டு துறை


அதேபோல் விளையாட்டு துறையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் . இந்த நிலையில் அமைச்சர் பணி மட்டுமின்றி கட்சி ரீதியான பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் கவனித்து வருகிறார். சினிமா பணிகளை முற்றாக நிறுத்திவிட்டு அமைச்சரவை பணிகள் மீதுதான் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

விளையாட்டு

விளையாட்டு

சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த நிலையில்தான் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பிற்கு அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் விவாதங்களில் உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறாராம். மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், மாநில அளவிலான கிரிக்கெட் தொடர்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறாராம் . இந்த பட்ஜெட் தொடரில் அமைச்சராக உதயநிதி பல அறிவிப்புகளை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம். உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது.

ஹாக்கி

ஹாக்கி


இதற்காக தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை பார்வையிட தற்போது உதயநிதி ஸ்டாலின் தஞ்சை சென்றுள்ளார். இந்த வாரம் அங்கே இடம் உறுதி செய்யப்படலாம். செங்கிப்பட்டியில் கண்டறியப்பட்ட இடம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இது போக சென்னையில் ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் போட்டிகளை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+