பொன்முடி தீர்ப்பில் சின்ன கதவைத் திறந்துவிட்ட நீதிபதி.. சாதகம் என்ன? பாதகம் என்ன?
சென்னை: பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கினால் அவரது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுமா? தீர்ப்பில் பொன்முடிக்கு ஆதரவாக உள்ள சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களைத் தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்குத் தள்ளி வைத்திருந்தார். இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்திற்குப் பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பில் பொன்முடிக்கு உள்ள சாதகம் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? இது குறித்து விளக்கம் அளிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
"பதவி இழப்பு என்பது மூன்று விதங்களில் நடிக்கிறது. ஒருவர் தேர்தலில் போட்டி இருக்கிறார். அவருக்குத் தேர்தலில் நிற்கத் தகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்து அவரது பதவியை இழக்கச் செய்வது.
அடுத்த நிலை, ஒருவர் நடத்தை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி சபாநாயகரின் உத்தரவினால் பதவியை இழக்க வைப்பது. இதைத்தாண்டி மூன்றாவது நிலைதான் நீதிமன்றத் தீர்ப்புகளால் ஒருவர் குற்றவாளி என நிரூபணம் ஆகும் போது அடுத்த நொடியே அவர் பதவியை இழந்தவராகக் கருதப்படுவது.
இதில் மூன்றாவது நிலையில்தான் பதவியை இழந்துள்ளார் பொன்முடி. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள் அதிக தண்டனைக்காலம் போனாலும் உடனே அவர் பதவியை இழந்துவிடுவார். அதுதான் சட்டத்தின் விதிமுறையாக இருக்கிறது.
இந்தத் தீர்ப்பில் பொன்முடிக்கான சாதகங்கள் என்ன? அதை முதலில் பேசிவிடுவோம்.
சாதகம் என்று பார்த்தால், நீதிமன்றம் அவருக்கு 30 நாள்கள் மேல் முறையீட்டுக்கு அவகாசம் அளித்திருக்கிறது. அதில்கூட பொன்முடிக்குச் சின்ன வாய்ப்பை தந்துள்ளார்.
ஒரு மாதத்திற்குள் வழக்கு முடியவில்லை என்றால் மீண்டும் வாருங்கள் என்று நீதிபதி கூறியுள்ளார். அது ஒரு சாதகம். இதனால் உடனடியாக சிறைக்குச் செல்லவேண்டிய நிலை வராது. அதுவும் மிகப்பெரிய சாதகம்தான்.
பாதகம் என்றால், அரசியல்ரீதியாக அவருக்கு இது மிகப்பெரிய பாதகம்தான். 3 ஆண்டுகள் தண்டனைப் பெற்றதால் அவர் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது.
உச்சநீதிமன்றம் இந்தத் தண்டனையைத் தள்ளுபடி செய்யும் வரை இதுவே நிலைமையாக இருக்கிறது. நிறைய விடுமுறைகள் நாள்கள் வர உள்ளன. கிறிஸ்துமஸ், நியு இயர் காலம் இது. ஆகவே ஒரு மாத அவகாசம் நிச்சயம் போதாது.
அடுத்து அவருக்குப் பதவி உடனடியாக பறிபோய்விடுகிறது. அது அவருக்குப் பெரிய இழப்புதான்.
இவற்றைத்தாண்டி எதிர்கால அரசியலில் இந்தத் தீர்ப்பு ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்றால், நிச்சயம் எதுவும் ஏற்படுத்தாது. அதுவே என் கருத்து.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஊழல் எதிர்ப்பு என்பதை மட்டுமே வைத்து மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்பதே கள யதார்த்தமாக உள்ளது.












Click it and Unblock the Notifications