ஜூலை 13ல் வெளியீடு.. கவிஞர் வைரமுத்துவின் வள்ளுவர் மறை நூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை, வைரமுத்து உரை எனும் நூல் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த நூலை வெளியிடுகிறார். இதன் விலை மற்றும் அரங்குக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் பற்றி வைரமுத்து முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
திருக்குறள்.. உலக பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 133 அதிகாரங்களுடன் மொத்தம் 1330 திருக்குறளை வள்ளுவர் இயற்றி உள்ளார். இந்த திருக்குறள் அறம், பொருள், இன்பம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் 2 அடி திருக்குறளில் வள்ளுவர் உலகுக்கு தந்து விட்டு சென்றுள்ளார்.

இந்த திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். இதற்கு 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டுள்ளார். இந்த நூல் ஜூலை 13ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பர் பெற்று கொள்ள உள்ளார். அதேபோல் வாழ்த்துரையை முனைவர்கள் இறையன்பு மற்றும் பரவீன் சுல்தானா வழங்க உள்ளார். ஏற்புரையை வைரமுத்து வழங்குகிறார். இந்நிலையில் தான் நூல் வெளியிட்டு விழா தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஜூலை 13இல் நிகழவிருக்கும்
— வைரமுத்து (@Vairamuthu) July 6, 2025
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை
விழாகுறித்து
இரண்டு ஐயங்கள் நிலவுகின்றன
ஒன்று:
காவல்துறையின்
கட்டுப்பாடுகள்
கெடுபிடிகள் இருக்குமா;
அரங்குக்குள்
எளிதாக நுழைய முடியுமா என்பது
என் விளக்கம்:
ஐயப்பட வேண்டாம்;
அச்சப்பட வேண்டாம்
கெடுபிடிகள் ஏதுமின்றி… pic.twitter.com/2ibn18LdoT
ஜூலை 13இல் நிகழவிருக்கும் வள்ளுவர் மறை வைரமுத்து உரை விழாகுறித்து இரண்டு ஐயங்கள் நிலவுகின்றன. ஒன்று.. காவல்துறையின் கட்டுப்பாடுகள் கெடுபிடிகள் இருக்குமா; அரங்குக்குள் எளிதாக நுழைய முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு என் விளக்கம் ஐயப்பட வேண்டாம்; அச்சப்பட வேண்டாம். கெடுபிடிகள் ஏதுமின்றி அனைவரையும் இயல்பாய் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளை அன்போடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். அரங்கு நிறையும் வரை காவல்துறை உங்களை அனுமதிக்கும் அதனால் நீங்கள் 'வாட்ஸ் ஆப்' அழைப்பைக் காட்டி அச்சமின்றி வருகைதரலாம்
இரண்டு: நூலின் விலை எளியோர் வாங்கத்தக்கதாய் இருக்குமா என்பது தமிழன்பர்களே! திருக்குறள் எல்லாரையும் எளிதில்சென்று அடைய வேண்டுமென்று 500ரூபாய் விலை கொள்ளத்தக்க நூலை வெறும் 250ரூபாய்க்கு வழங்குகிறோம்; அதிலும் கழிவு உண்டு
எம்பெருமான் வள்ளுவர் எல்லாரையும் சென்று சேரவேண்டும். வாங்கிப் படியுங்கள்; திருக்குறளைத் தாங்கிப் பிடியுங்கள். ஐயங்கள் தீர்ந்தனவா? அன்பும் நன்றியும்'' என கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில், ‛‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை.. இன்பத்துப்பாலில் 250 குறள்கள்; அத்துணையும் கவிதைகள் இதோ ஒரு கவிதையின் உரையை சுவைக்கிறீர்களா?'' எனக்கூறி வைரமுத்து தான் பேசும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், வைரமுத்து, ‛‛வள்ளுவர் மறை வைரமுத்து உரை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் வள்ளுவர் அறிஞர், காமத்துப்பாலிலோ அவர் கவிஞர். காமத்துப்பாலில் 250 குறட்பாக்களும் 250 கவிதைகள்.
இதோ எடுத்துக்காட்டாக 1,127 குறள். காதலி சொல்கிறாள். நான் என் கண்களுக்கு அஞ்சனம் தீட்ட மாட்டேன். காரணம் என் கண்களுக்குள்ளே காதலன் இருக்கிறான். ஏன் தீட்ட மாட்டேன் என்பது தான் உரையின் நயம்.
வள்ளுவர் மறை
— வைரமுத்து (@Vairamuthu) July 8, 2025
வைரமுத்து உரை
இன்பத்துப்பாலில்
250 குறள்கள்;
அத்துணையும் கவிதைகள்
இதோ
ஒரு கவிதையின்
உரையைச் சுவைக்கிறீர்களா?#திருக்குறள் #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/IazkCCRF49
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து - என்பது குறள்
இந்த குறளுக்கு நான் எழுதியுள்ள உரை, ‛‛கண்களுக்குள்ளே என் காதலர் உள்ளார். எப்படி அஞ்சனம் பூசுவேன். கை எழுதும் கோலால் அவர் கண்களை காயப்படுத்த மாட்டேன் மற்றும் அவர் முகத்தில் கரிபூசமாட்டேன். மேலும் மை தீட்டும் போது என் இமைகள் இறங்கும். அந்த ஒரு கணமும் அவர் மறைவதற்கு இடம் கொடுக்க மாட்டேன். இதனால் என் விழிகளுக்கு அஞ்சனம் பூசுவதை விட்டு விட்டேன். இதுதான் 1,127 ம் குறளுக்கு வள்ளுவர் மறை வைரமுத்து உரை சொல்லும் பொருள்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications