Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை? நீதிபதி கேள்வி! தமிழக அரசு சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் அனைத்து அவை நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி வேலுமணியும் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

What is the problem with live telecasting of entire proceedings of TN Assembly?: High Court

இந்த வழக்குகள் கடந்த முறை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது எஸ்பி வேலுமணி தரப்பில், அரசியல் சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க எந்த தடையும் இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி, சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும் உயர்நீதிமன்ற நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

எஸ்பி வேலுமணி தரப்பில், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதாகவும் ஆளுங்கட்சியினர் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டு விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவித்ததுடன், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டார். மனுதாரர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை என்றும், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பி.எஸ்.ராமன் குற்றம்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+