தங்கம் விலை முழம் ஏறினால் ஜான் அளவுக்கே சறுக்குது! சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600-க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று அதிகரித்து இன்று திடீரென குறைந்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. தொடர்ந்து 4 தினங்களாக விலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் 5 ஆவது நாள் 140 ரூபாய் அதிகரித்தது.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அதே 140 ரூபாய் குறைந்தது. கடந்த 31 ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஜூலை 31 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 51,360 க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 6,420 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ 91 க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ 91 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 அதிகரித்து, ரூ 51,440 க்கும் கிராமுக்கும் ரூ 10 அதிகரித்து ரூ 6430 க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொருத்தவரை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ 91.70 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ 700 அதிகரித்து ரூ 91,700 விற்கப்பட்டது.
நேற்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு உயர்ந்தது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ரூ 50 ஆயிரத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் விலையிலேயே குறைவதும் அதிகரிப்பதுமாக இருப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications