ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்க என்ன காரணம்? வழக்கறிஞர் வைத்த ஒரு வாதம்.. எல்லாம் மாறிடுச்சு
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய தணிக்கை குழுவின் முக்கியமான வாதம் ஒன்றுதான் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எப்படி தயாரிப்பு நிறுவனம்... பொய்யாக ஒரு அவசரநிலையை காட்டி எப்படி படத்தை இவர்கள் ரிலீஸ் செய்ய சொல்லலாம். சிபிஎப்சி அமைப்பிற்கு இவர்கள் நேரம் கொடுத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எப்படி ஒரு படத்திற்கு சர்டிபிகேட் வழங்க முடியும். கட் செய்யப்பட்ட காட்சிகளை பார்க்காமல்.. படத்தை எப்படி ரிலீஸ் செய்ய சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார்.

ஜனநாயகன் வழக்கு
இதற்கு ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தின் வெளியீட்டை ஒரு அதிகாரி மட்டுமே எதிர்த்தார். மற்ற அதிகாரிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு கூறவில்லை, என்று வாதம் வைத்தனர்.
இதற்கு மத்திய தணிக்கை குழு கொடுத்த பதிலில், தனி நீதிபதி படத்திற்கு நேரடியாக அனுமதி கொடுத்துவிட்டார். படத்திற்கு சர்டிபிகேட் கொடுக்க CBFCக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் கேட்டது. ஆனால் அவர்கள் கேட்காமலே.. படத்திற்கு u/a சர்டிபிகேட் கொடுத்துள்ளது கோர்ட். இதை தயாரிப்பு நிறுவனம் கோரிக்கையாக வைக்கவில்லை.
இதில் எங்களுக்கு பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நேரம் தரப்படவில்லை. தணிக்கை குழுவின் உறுப்பினர், சேர்மன் படத்திற்கு எதிராக ரிவைசிங் அனுப்ப முடியும். ஆனால் அந்த உரிமையை நீதிபதி நீக்கி உள்ளார். அதோடு அவர்கள் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே அவசரமாக விசாரிக்கப்பட்டு.. மறுநாள் ஒரு நாள் மட்டும் டைம் கொடுத்து.. அதற்கு மறுநாளே தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்று வாதம் வைத்தார். இந்த வாதம் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு எதிர் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல், ஒரு தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டுத் தேதியை நிர்ணயிக்க முடியும் என்றும் அவர் கேட்டார். பதில் மனு தாக்கல் செய்ய மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் கோர உரிமை இல்லையா என்றும் அவர் வினவினார்.
இதையடுத்தே பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது ஏன்? பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல் தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? Censor சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டுத் தேதியை நிர்ணயிக்க முடியும்?
பதில் அளிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் அளிக்க உரிமை இல்லையா? நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications