கேன்சல் பண்ணுங்க.. புயலை கிளப்பிய மோடியின் பிளான்.. எடப்பாடி, ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்தது ஏன்?
சென்னை: நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க மறுத்துவிட்டார். அவரின் இந்த முடிவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க மறுத்துவிட்டார். அவரின் இந்த முடிவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

நேரம் கேட்டனர்: நேற்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அதாவது.. அவரிடம் தனியாக பேச 5 நிமிடம் கேட்டுள்ளனர். இதில் மோடியிடம் தான் வழக்கில் தோற்றது பற்றியும், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைக்க உதவ வேண்டும் என்பது பற்றியும் ஓ பன்னீர்செல்வம் பேச முயன்று இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியோ, தன்னை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். டெல்லி பாஜகவும் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்க முயன்று இருக்கிறார். இதற்காகவே மோடியை சந்திக்க இவர்கள் திட்டமிட்டனர்.
5 நிமிடம்: அந்த வகையில் இவர்களை சந்திக்க தலா 5 நிமிடம் என்று 10 நிமிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களும் மோடியை சந்திக்க ரெடியாக இருந்துள்ளனர். ஆனால் கடைசியில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த சந்திப்பு நடக்க வேண்டாம்.. நடக்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மோடிதான் இவர்களை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் இந்த முடிவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் 1: அதன்படி டெல்லி ஏற்கனவே இதில் சமாதானமாகி செல்ல வேண்டும் என்று எடப்பாடி -ஓ பன்னீர்செல்வத்தை வலியுறுத்தி உள்ளது. ஆனால் இதை அவர்கள் கேட்கவில்லை. டெல்லி பேச்சை இருவரும் கேட்கவில்லை. அதிலும் ஒரு படி மேலே போய் எடப்பாடி பாஜகவை சில இடங்களில் எதிர்க்கவும் செய்தார். இதை மோடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

காரணம் 2: அதிமுக மோதல் விவகாரம் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க இதில் தலையிட மோடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால்.. 2024 தேர்தலுக்கு முன் அதிமுக விவகாரத்தில் கவனம் செலுத்துவோம். இப்போது கர்நாடகா தேர்தல், மற்ற 4 மாநில தேர்தல்கள்தான் முக்கியம். அதிமுக விவகாரம் முக்கியம் இல்லை. அதனால் அதில் கவனம் செலுத்த வேண்டாம் என்று மோடி நினைக்கிறாராம்.
காரணம் 3: கடைசியாக கர்நாடக தேர்தலில் இன்னும் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு தரவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதிமுக மட்டும் சுயநலமாக தங்கள் விவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பதை பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனால்தான் ஏர்போர்ட்டில் வணக்கம் வைத்ததோடு மோடி நிறுத்திக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications