ஒரே குழப்பமா இருக்கே.. செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தது ஏன்? வலையில் மாட்டிய "திமிங்கலம்"? அடடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது திமுகவிற்குள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாம். எதற்காக அவர் திடீரென ராஜினாமா செய்தார் என்று கட்சி உள்ளேயே பெரிய அளவில் விவாதங்கள் ஏற்பட்டு உள்ளதாம்.

இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 14 முதல் தற்போது வரை சிறைவாசம் தொடர்வதால் செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

What is the real reason behind Tamil Nadu Minister senthil Balaji resignation?

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன்; உங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காக போராட எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த உங்களுக்கு நன்றி. நான் நிரபராதி உண்மையை வெளிக் கொண்டு வர சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன்; நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது விரைவில் நீதி வெல்லும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போக.. இவர் அமைச்சராக நீடித்தது ஒரு காரணமாக இருந்தது. தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை; இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி திடீரென ராஜினாமா செய்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாம்.

1. இவர் தானாக உயர் நீதிமன்ற கண்டனங்கள் காரணமாக ராஜினாமா செய்தாரா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இவர் அமைச்சராக நீடித்ததை உயர் நீதிமன்றம் கண்டித்து இருந்தது.

2. ராஜினாமா செய்யும்படி இவரை திமுக தலைமை அறிவுறுத்தியதா? ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக தலைமை அறிவுறுத்தியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

3. பெரும்பாலும் இதுபோல வழக்கில் சிக்கி இருக்கும் பலர்.. தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜக பக்கம் செல்வது உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி அப்படி பாஜக பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் கூறப்படுகிறது. பாஜக பக்கம் செல்வதற்கான எந்த திட்டமும் செந்தில் பாலாஜியிடம் இல்லை. இருந்தாலும் அவரின் ராஜினாமா காரணமாக " திமிங்கலம் வலையில் சிக்கிடுச்சோ" என்பது போன்ற விவாதங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே எழுந்துள்ளது.

4. அமைச்சராக இருப்பதால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதாக ஒரு சட்ட வாதம் வைக்கப்படுகிறது. இதனால் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று அவர் ராஜினாமா செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜாமீன் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளார். கடந்த விசாரணையின் போது, ​​பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.

சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார்.

பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 19வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+