இதுதான் ரியல் காரணம்.. அண்ணாமலை மீது தமிழிசைக்கு ஏற்பட்ட கோபம்.. உண்மையில் இதுவா நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் அண்ணாமலை கோஷ்டிக்கும், சீனியர் கோஷ்டிக்கும் தகராறு. பாஜக தோற்க அண்ணாமலை காரணம் என்று சீனியர்கள் நினைக்கிறார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.

lok sabha election 2024 tamilisai soundrarajan amit shah 2024

ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.

இன்னொன்று நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.

அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன், என்றெல்லாம் தமிழிசை விமர்சனம் செய்து வருகிறார்.

பேட்டி: இவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவில் அண்ணாமலை கோஷ்டிக்கும், சீனியர் கோஷ்டிக்கும் தகராறு. பாஜக தோற்க அண்ணாமலை காரணமே என்று சீனியர்கள் நினைக்கிறார்கள். எல்லாமே அண்ணாமலை முடிவு. அவர்தான் கூட்டணி வேண்டாம் என்றார். கூட்டணி உடைய அவர்தான் காரணம். அப்படி இருக்க அவர்தான் தோல்விக்கு காரணம் என்று தமிழிசை நினைக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் கூட நினைக்கின்றனர்.

வாக்கு வங்கி உயர்ந்தது என்று அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அதெல்லாம் சரியாகாது. கவர்னர் பதவி எல்லாம் விட்டு வந்தோம். இப்படி தோற்றுவிட்டோம் என்று தமிழிசை நினைக்கிறார். அண்ணாமலை முடிவுகள்தான் இதற்கு காரணம் என்று தமிழிசை நினைக்கிறார். அண்ணாமலைக்கு தோல்வி பிரச்சனை இல்லை . அவர் வரிசையாக தோல்வி அடைகிறார். வெட்கம் இல்லாமல் பாஜக வளர்கிறது என்று சொல்கிறார். ஆனால் தமிழிசை அப்படி இல்லை.

தமிழிசைக்கு கோபம். தமிழிசை கவர்னர் பதவி எல்லாம் விட்டு வந்தோம். இப்படி தோற்றுவிட்டோம் என்று தமிழிசை நினைக்கிறார். அதனால் கோபமாக இருக்கிறார். கடந்த 1 வருடங்களில் பாஜகவில் பல ரவுடிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதாகி உள்ளனர். அதைத்தான் தமிழிசை சொல்கிறார். அதைத்தான் தமிழிசை விரும்பவில்லை. நாம் வெற்றிபெற்று இருக்கலாம். அதை அண்ணாமலை கெடுத்துவிட்டார் என்று தமிழிசை நினைக்கிறார்.

பாஜக வாக்கு வங்கி எல்லாம் உயரவில்லை. பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டு உள்ளது. அதனால் அதிக வாக்கு வங்கி வந்துள்ளது. அப்படி இருக்க தமிழிசைக்கு கண்டிப்பாக அண்ணாமலை மீது கோபம் இருக்கவே செய்யும் என்று பிரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+