விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை.. கடும் மன அழுத்தம்.. தெரபியில் என்ன நடந்தது? பரபர பின்னணி
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக அந்த மாணவியின் தெரபி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் மீரா. மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விஜய் ஆண்டனிக்கு நெருக்கமான தரப்பினர் நம்மிடம் தெரிவித்தது.. விஜய் ஆண்டனி மகள் மீராதான் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பலர் அவரின் இன்னொரு மகள் லாரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளனர்.
அது தவறு. மீரா... நன்றாக படிக்க கூடியவர். அவர் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடியவர். முக்கியமாக பள்ளி கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து வந்தார். மிகவும் ஆர்வமான, சுட்டியான குழந்தை.
12ம் வகுப்பு படிப்பதால் கடுமையான பிரஷரில் இருந்துள்ளார். இது போக இவர் அடிக்கடி தூக்கம் இன்றி தவித்து உள்ளார். தூக்கம் வராமல் இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இந்த மன அழுத்தத்திற்கு இவர் தெரபி சென்றுள்ளார்.
மனநல ஆலோசகரை சந்தித்து இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனக்கு இருக்கும் மன அழுத்தம், தூக்க பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இவர் நண்பர்களிடம் பேசி உள்ளார். மன அழுத்தத்திற்கு வெளிப்புற காரணங்கள் தேவையில்லை. அந்த வகையில் இவரின் மன அழுத்தத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக கடுமையாக தூக்கம் இன்றி தவித்து உள்ளார். இருந்தாலும் சமீபத்தில் கூட அவர் பள்ளியில் கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக கூட தேர்வானார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். தற்போது உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விஜய் ஆண்டனி மகளின் உடல்;. இறப்பு குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் ஏற்கனவே தற்கொலை எண்ணத்தோடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அது பற்றி விசாரணை செய்ய உள்ளனர். முதலில் மீராவின் பெற்றோரிடம் விசாரணை செய்ய உள்ளனர்.
அதை தொடர்ந்து அவரின் நண்பர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர். இவருக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் இவர் பள்ளியில் சிறப்பாக இருந்தாலும் மன ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். அப்பா இல்லாத நேரம் பார்த்து விஜய் ஆண்டனி அறைக்கு சென்றுள்ளார்.
அங்கே யாரும் இல்லாததால் அதை பயன்படுத்திக்கொண்டு அங்கேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து இருக்கிறார் மீரா. காலையில் வீட்டு உறுப்பினர்கள்தான் உடலை பார்த்து உள்ளனர். இதையடுத்து உடலை இறக்கி போலீசாருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications