வருமான வரி ITR போர்ட்டல் இன்னும் திறக்கப்படாதது ஏன் தெரியுமா? இப்படி ஒரு ஷாக்கிங் காரணமா!
சென்னை: ஏப்ரல் 23, 2025 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை இன்னும் வெளியிடவில்லை. இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
முக்கியமாக இந்த ஆண்டுக்கான கொள்கைகள் மற்றும் வரி regimeகள் ஏற்கனவே பட்ஜெட் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் கூட இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.

AY 2025-26க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு தேதிகள் ஏற்கனவே உள்ள அட்டவணையின்படியே பின்பற்றப்படும்:
31 ஜூலை 2025 - தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
31 அக்டோபர் 2025 - தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் அல்லது நிபுணர்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
30 நவம்பர் 2025 - தணிக்கை தேவைப்படும் மற்றும் TP (பரிமாற்ற விலை) விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
ஏன் இன்னும் வருமான வரி பக்கம் திறக்கவில்லை?
வருமான வரி பக்கம் திறக்கப்படாமல் போன தாமதத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்று இன்னும் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது வருமான வரி பக்கத்தின் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது
புதிய regime படிவ மாற்றங்கள், பழைய regime மாற்றங்கள் ஆகிய மாற்றங்களை ஏற்கும் விதமாக வருமான வரி இ-ஃபைலிங் போர்டலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வரி செலுத்துவோர் பயன்படுத்தும் வருமான வரி தளத்தின் மென்பொருள் கருவிகள் (JSON/Java/Excel பதிப்புகள்) இன்னும் சோதனை நிலையில் உள்ளன. கடைசி கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.
முன்பே நிரப்பப்பட்ட ரிட்டர்ன் டேட்டாவிற்கு AIS (வருடாந்திர தகவல் அறிக்கை) மற்றும் TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) டேட்டா ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருவதால் அவை முடிந்த பின்பே வருமான வரி பக்கம் திறக்கும்.
2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும்.
பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும். ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும்.
ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.












Click it and Unblock the Notifications