11 வருட மணவாழ்க்கை.. 6 மாதத்தில் ஓவர்.. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிய என்ன காரணம்? ஷாக் பின்னணி
சென்னை: இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இருவரும் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தங்கள் முடிவை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு, திருமணமான 11 ஆண்டுகளுக்குப் பிறகு சைந்தவியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இருவரும் அந்த அறிக்கையில் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இந்த தனிப்பட்ட முடிவின் போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வாழ போகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு நிறைய பலம் கொடுக்கிறது. நன்றி.
குழந்தை: ஆஸ்கார் விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ் குமார், 2013ல் தனது பள்ளி பருவ காதலியான சைந்தவியை மணந்தார். சைந்தவி பின்னணிப் பாடகி. அவர்களுக்கு 2020 இல் குழந்தையும் பிறந்தது.
கடந்த ஆண்டு, சைந்தவி ஜிவி பிரகாஷுக்கு 10 வருட திருமண வாழ்த்துக்களை கூட தெரிவித்தார். அவர்களது திருமண நாளின் புகைப்படத்தைப் பகிர்ந்த சைந்தவி , "எங்களுக்கு திருமணமாகி ஒரு தசாப்தம் ஆகிறது. ஆனால் நேற்றுதான் திருமணம் நடந்தது போல் உணர்கிறேன் . என் வாழ்க்கையின் அன்பு ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு 10வது திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கள் மகளுக்கு அற்புதமான நண்பர், அற்புதமான கணவர் மற்றும் நம்பமுடியாத தந்தையாக இருப்பதற்கு நன்றி. நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதற்கு நன்றி. நிலா இருக்கும் தூரத்தை விட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். 10 ஆண்டுகள் முடிந்தது.. இன்னும் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும்!!!, என்று சைந்தவி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
விவாகரத்து: இப்படிப்பட்ட நிலையில்தான் ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இருவரும் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தங்கள் முடிவை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி கடந்த சில வருடங்களாக ஜிவி பிரகாஷ் படங்களில் சில நடிகைகளுடன் நடித்த விதம் சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக சில நடிகைகளுடன் அவர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கடந்த 6 மாதங்களாக இவர்கள் ஒன்றாக வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் சில நடிகைகளுடன் நட்பாக இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து மோதல்.. சண்டையாக மாறி அது மனஸ்தாபத்திற்கு இட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுவே இவர்களுக்கு இடையில் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications