மில்லியன் டாலர் கேள்வி! அடிபட்ட அண்ணாமலை, ராஜ்நாத் பெயர்! குடியரசு துணைத் தலைவர் தன்கர் ராஜினாமா ஏன்
சென்னை: நேற்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். அவர் மார்ச் மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் இந்த திடீர் ராஜினாமாவிற்கு பின் பல காரணங்கள் , உள் விவகாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
74 வயதாகும் தன்கர் தனது உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், "என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022-ல் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. துணை ஜனாதிபதி என்பதால் அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அவரது ராஜினாமா செய்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன்கர் - மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி
துணைக் குடியரசுத் தலைவராக தன்கர் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி வகித்துள்ளார். ஜூலை 23 அன்று ஜெய்ப்பூருக்கு அவர் மேற்கொள்ளவிருந்த அதிகாரப்பூர்வ பயணம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் தனக்குக் கிடைத்ததாக அவரே நாடாளுமன்றத்தில் அறிவித்தது அரசாங்கத்திற்கு ஆச்சரியத்தை அளித்தது.
யாரிடமும் சொல்லாமல் ராஜினாமா?
இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பலரிடமும் தெரிவிக்காமல்.. தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுக்க எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ராஷ்டிரபதி பவனுக்கு தன்கர் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் தன்கர் சமீப காலமாக நெருக்கமாக இருந்ததாகவும் செய்திகள் பரவின. கடந்த வாரம் மல்லிகார்ஜுன் கார்கேவை அவர் சந்தித்து பேசியுள்ளார், மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் விருந்து அளித்துள்ளார்.
1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் பிறந்த தன்கர், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1979 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
1990 களில் அரசியலில் நுழைந்த அவர், ஜனதா தளம் சார்பில் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அரசாங்கத்தில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 2003 இல் பாஜகவில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டில், மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு மம்தா பானர்ஜி அரசாங்கத்துடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
அரசியல் பின்னணி
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 14 வது துணைத் தலைவராக தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆகஸ்ட் 11, 2022 அன்று அவர் பதவி ஏற்றார். அவர் அடிக்கடி ஒருதலைபட்சமாக செயல்பட்டது, நீதிமன்றங்களை விமர்சனம் செய்தது பெரிய அளவில் சர்ச்சையானது. டிசம்பர் 2024 இல் எதிர்க்கட்சிகள் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு தன்கர் கடும் அதிருப்தி தெரிவித்தார், மேலும் தான் மிகவும் வருத்தப்பட்டதாக கூறினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் அவரை நாடாளுமன்ற வாயிலில் மிமிக்கிரி செய்து கிண்டல் செய்தனர்.
ராஜினாமாவிற்கு பின் பல கதைகள்
இவரின் ராஜினாமாவிற்கு பின் பல கதைகள் கூறப்படுகின்றன. உதாரணமாக,
1. மோடி இவர் மீது அப்செட்டில் இருக்கிறார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
2. இவருக்கு இந்த வருடம் 75 வயது ஆகிறது. இதனால் அவர் ராஜினாமா செய்து.. அதன் மூலம் பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு பின் ஆர்எஸ்எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3. ராஜ்நாத் சிங் துணை ஜனாதிபதி ஆவார் - அதன் மூலம் அண்ணாமலை அல்லது வேறு ஒருவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆவார் என்றும் கதை உலாவி வருகிறது.
4. நட்டா - தன்கர் இடையிலான மோதலே தன்கர் ராஜினாமாவிற்கு காரணம் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
அடுத்த 60 நாட்களுக்குள் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி அரசாங்கத்திற்கு உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தன்கரின் ராஜினாமா வந்துள்ளது. ராஜ்யசபாவின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை தன்கருக்கு பதிலாகப் பதவி வகிப்பார். விரைவில் தேர்தல் ஆணையம் துணைத் தலைவருக்கான தேர்தல் அட்டவணையை அறிவிக்கும். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள். அரசாங்கம் யாரை அடுத்த குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications