ஆஸ்திரேலியா செய்த "சின்ன" தவறு.. கப்பென பிடித்துக்கொண்ட இந்தியா.. சரசரவென விக்கெட் விழுந்தது எப்படி?
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் மொத்தமாக சரிவதற்கு அவர்கள் முக்கியமான ஒரு விதியை பின்பற்றாததே காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்று ஆடும் அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியவில் உலகக் கோப்பை 2023 ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. விறுவிறுப்பாக செல்லும் தொடரில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மேட்ச் நடந்து வருகிறது. இதில் இந்தியா டாஸ் வென்ற நிலையில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
சொதப்பல்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் மொத்தமாக சரிவதற்கு அவர்கள் முக்கியமான ஒரு விதியை பின்பற்றாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் 2.2 ஓவரிலேயே மிட்சல் மார்ஷ் டக் டவுட் ஆனார். உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய ஓப்பனிங்கில் ஒருவர் இந்தியாவிற்கு எதிராக டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும்.
இதன் பின் வார்னர் - ஸ்மித் டீம் போட்டு இந்தியாவிற்கு பிரஷர் கொடுப்பார்களா என்ற அச்சம் இருந்த போது 41 ரன்கள் இருந்த நிலையில் அவரின் விக்கெட்டை எடுத்தார். அதை தொடர்ந்து ஜடேஜா ஓவரில் ஸ்மித் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் லபு சேனும் 27 ரன்கள் எடுத்து ஜடேஜா ஓவரில் அவுட் ஆனார்.

இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் 15 ரன்கள் எடுத்து குல்தீப் ஓவரில் அவுட் ஆனார். இந்த ஸ்பின் பவுலர் ஓவர்களில் எல்லாம் விக்கெட் விழ முக்கிய காரணம் ஆஸ்திரேலியா செய்த சிறிய தவறுதான். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணியாமல் ஆடினர். கேப் அணிந்து ஆடினர்.
இதனால் அவர்களால் சரியாக குனிய முடியவில்லை. அவர்களால் குனிந்து ஆட முடியவில்லை. இதனால் பந்தை தடுக்க முடியாமல் அவுட் ஆனார்கள். இவர்கள் ஹெல்மெட் அணியாமல் வரிசையாக ஸ்பின் பவுலர்கள் ஓவர்களில் அவுட் ஆனார்கள் .அவர்களால் தலையை சரியாக கீழே கொண்டு வர முடியாதது விக்கெட் விழா காரணம் ஆனது. இதனால் நல்ல தொடக்கம் இருந்தும் ஆஸ்திரேளுயா 199க்கு ஆல் அவுட ஆகி உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜடேஜாதான் இன்று ஆட்டத்தை மாற்றினார். ஆஸ்திரேலியர்கள் ஹெல்மெட் அணியாதது அணியையே சாய்த்துள்ளது.
இது போக இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த தரமான பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. சென்னையில் மிதமான வானிலை நிலவி வருகிறது. மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றாலும் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதனால் இன்று ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. டெங்கு காரணமாக இன்று நடக்கும் போட்டியில் சுப்மான் கில் ஆடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications