பார்ட்டிக்கு காசு கொடு.. டான்ஸர் ரமேஷ் மரணத்திற்கு என்ன காரணம்? உண்மையில் நடந்தது என்ன?
டான்ஸர் ரமேஷ் மரணத்திற்கு அவரின் முதல் மனைவிதான் காரணம் என்று ரமேஷுக்கு நெருக்கமான உறவினர்கள் புகார் வைத்துள்ளனர்.
சென்னை: ரீல்ஸ் பிரபலம் டான்ஸர் ரமேஷ் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணம் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
டான்ஸர் ரமேஷ் சமூக வலைத்தளங்கள் மூலம் சமீபத்தில் பிரபலம் அடைந்தார். இவர் சாலை ஓரத்தில் நடனமாடி வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க டிரெண்டானது.
மைக்கேல் ஜாக்சன் போல கால், உடலை வளைத்து இவர் போட்ட ஆட்டம் இணையம் முழுக்க டிரெண்டானது. உடனே சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது.

சினிமா வாய்ப்பு
அஜித் குமார் நடித்த துணிவு படத்தில் சமீபத்தில் நடித்தார். அதற்கு முன்பே சில பாடல்களிலும் இவர் நடனம் ஆடி இருக்கிறார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் கூட டான்ஸர் ரமேஷ் நடனம் ஆடி உள்ளார். இவர் நடனம் மூலம் புகழ்பெற்றதை அடுத்து சமீபத்தில் தனியாக தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடியது கவனம் பெற்றது.
ரமேஷ்

நடிகர்
நடிகர், நடன பயிற்சியாளர் பிரபுதேவா போன்றவர்கள் கூட இவரை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். இவரின் முதல் மனைவி புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் ரமேஷ். முதல் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை தொடர்பாக சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். தன்னை எல்லோரும் ஏமாற்றுவதாக இவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஏமாற்றுகிறார்கள்
தெரியாமல் சில தவறுகளை செய்துவிட்டேன். இப்போது சில உண்மைகளை புரிந்துகொண்டு உள்ளேன் என்று அவர் பெயர் குறிப்பிடாமல் சிலர் மீது புகார் வைத்து இருந்தார் ரமேஷ். இந்த நிலையில்தான் ரமேஷ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். முதல் மனைவியின் வீட்டின் 10வது மாடியில் இருந்து இவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முதல் மனைவியை நேற்று இவர் சந்திக்க சென்றுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல் மனைவியையும், தனது குழந்தைகளையும் சந்திக்க சென்றுள்ளார்.

முதல் மனைவி அனுமதிக்கவில்லை
இதில் முதல் மனைவி தனது குழந்தைகளை ரமேஷ் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. குழந்தையை பார்க்க விடு என்று மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால் கடைசி வரை அந்த பெண் குழந்தைகளை காட்ட விடவில்லை. இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி வைக்க முதல் மனைவியிடம் காசு கேட்டு இருக்கிறார்.

காசு
காசு கேட்டதற்கு.. நீதான் இரண்டாவது கல்யாணம் செய்துவிட்டாய் அவரிடம் போய் காசு கேளு என்று குறிப்பிட்டு இருக்கிறார் முதல் மனைவி. இந்த பார்ட்டி விவகாரமும் இருவருக்கும் இடையில் சண்டை நடக்க காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் டான்ஸர் ரமேஷ் மரணத்திற்கு அவரின் முதல் மனைவிதான் காரணம் என்று ரமேஷுக்கு நெருக்கமான உறவினர்கள் புகார் வைத்துள்ளனர். முதல் மனைவி அவரை தொடர்ந்து தொல்லை செய்து வந்தார். இதனால் இரண்டாவதாக வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளும் குணம் கொண்டவர் அல்ல. அவரின் மரணத்திற்கு முதல் மனைவிதான் காரணமாக இருந்திருப்பார் என்று ரமேஷுக்கு நெருக்கமான உறவினர்கள் புகார் வைத்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications