"வைடு ஓபன்".. முன்னாள் தலைவர் நான்.. நடவடிக்கை எடுப்பேன்.. முற்றும் தமிழிசை அண்ணாமலை மோதல்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாஜக தமிழ்நாட்டில் வலிமை இல்லாமல் இருந்தாலும் கட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இருக்காது. அமைதியான மிடில் பென்ச் ஸ்டூண்ட் போலத்தான் பாஜக இருந்து கொண்டு இருந்தது. ஆனால் தமிழக பாஜக கடந்த 2 வருடங்களில் பல இடங்களில் வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அப்படி இருக்க அண்ணாமலை மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவை தூக்கி நிறுத்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஜக 25 சதவிகித வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. கண்டிப்பாக 25 சதவிகிதம் பெறுவோம். 9 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்றெல்லாம் பேசினார்.
ஆனால் இந்த பேச்சுக்கள் எல்லாம் வீணாகி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமான பின்னடைவையே கொடுத்துள்ளன. அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பாஜக கூட்டணியில், ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.
மோதல்; பாஜக தோல்வி காரணமாக அந்த கட்சிக்குள் பலர் அண்ணாமலை மீது அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
( நாங்க வியூகத்தை அமைத்தோம்.. அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை! தமிழிசை பரபரப்பு.. ஐடி விங் மீதும் அட்டாக் )
தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.
அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன்.
நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.
மோதலுக்கு என்ன காரணம்: ஆங்கிலத்தில் வைடு ஓபன் என்று கூறுவார்கள். அதாவது வெளிப்படையாக மொத்தமாக மோதல் வெளியே தெரிய தொடங்கிவிட்டது. இந்த மோதலுக்கு பின் வரும் காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
1. அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக பேசினார். இது அதிமுக கூட்டணி உடைய காரணம்.
2. பாஜகவில் மூத்த தலைவர்களை அண்ணாமலை ஓரம்கட்டினார்.
3. தேர்தல் வியூகங்களை சரியாக வகுக்கவில்லை.
4. வேட்பாளர் தேர்வில் சரியாக செயல்படவில்லை.
5. தேர்தல் செலவினங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம்.
6. பாஜக சீனியர் தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலையே செயல்படுவதாக புகார்.
7. கட்சி நிர்வாகிகளையே அண்ணாமலையின் வார் ரூம் அட்டாக் செய்வதாக புகார் என்று பல தரப்பட்ட புகார்கள்தான் இந்த மோதலுக்கு காரணமாக மாறி இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications