நாங்க வியூகத்தை அமைத்தோம்.. அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை! தமிழிசை பரபரப்பு.. ஐடி விங் மீதும் அட்டாக்
சென்னை: பாஜக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன், என்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழக பாஜக வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால்
2014: 5.5% (2,223,566 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி)
2019: 3.7% (1551924 வாக்குகள்) (அதிமுக கூட்டணி)
2024: 10.7% (3345897 வாக்குகள்) (என்டிஏ கூட்டணி) முன்னேற்றம் போல தெரியலாம்.
ஆனால் 2014ல் பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. அப்போது அவர்கள் போட்டியிட்டது 8 சீட். 2014ல் அவர்கள் போட்டியிட்டது 5 சீட். 2019ல் ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள் வந்துள்ளது. 2014ல் ஒரு தொகுதிக்கு சராசரியாக 277945 வாக்குகள் வந்துள்ளது. ஆனால் 2024ல் 23 இடங்களில் பாஜக சின்னம் நின்றுள்ளது. பாரி வேந்தர் தேவநாதன் யாதவ் எல்லாம் சேர்த்து.
இதில் தொகுதிக்கு 1.7 லட்சம் வாக்குகள் என்று பாஜக சுருங்கி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் எடுத்ததை விட பாஜக சரிந்து உள்ளது. 50 சதவிகித வளர்ச்சி அண்ணாமலை தலைமைக்கு கீழ் சென்றுள்ளது. மொத்தமாக 11 சதவிகிதம் வாக்கு பெற்றுள்ளது. பாஜக 25 சதவீதம் வாக்குகளை பெறும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அதுவும் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளது.
அண்ணாமலை பாஜக: இந்த நிலையில் தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.
இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.
அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன்.
நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications