முதல்வருடன் விஜய் ஸ்வீட் சந்திப்பு! சில நிமிடங்களில் ரசிகர்களுக்கு ஸ்டிரிக்ட் உத்தரவு! என்ன காரணம்?
சென்னை: நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நேற்று இரவு விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் என்ன இருக்கிறது.. உத்தரவிற்கு பின் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
Recommended Video

சென்னையில் ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் கல்பாத்தி எஸ் அகோரம் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் பல முன்னணி பிரபலங்கள், அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் நடிகர் விஜய். இதே நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

சந்திப்பு
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரும் போது அவரை நடிகர் விஜய் சந்தித்தார். ஸ்டாலின் அருகே சிரித்தபடி சென்று அவரிடம் விஜய் கை குலுக்கினார். எப்படி இருக்கீங்க சார் என்று கேட்டு விஜய் ஸ்டாலினிடம் விசாரித்தார். பதிலுக்கு விஜயை முதல்வர் ஸ்டாலினும் நலம் விசாரித்தார். இதையடுத்து எம்எல்ஏ நடிகர் உதயநிதியை நடிகர் விஜய் சந்தித்தார்.

கட்டிஅணைத்தனர்
இருவரும் அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தனர். இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்து சில மணி நேரங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரையாவது இழிவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அப்படி பேசினால் அவர்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மீம்ஸ்
இது தொடர்பாக நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு பதவிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்தத் தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

கடும் உத்தரவு
இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும் நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்
ஆனால் இந்த அறிவிப்பிற்கும் முதல்வரை விஜய் சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே அவரின் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது.. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இப்போது புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டு இருக்கும் அறிக்கை வேறு காரணங்களுக்காக வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்படி சமீப நாட்களாக விஜய் ரசிகர்களுக்கும் நடிகர் அஜித் ரசிகர்களுக்கும் இணையத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

கடும் மோதல்
மாறி மாறி இரண்டு தரப்பும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமான டிரெண்டுகளை மேற்கொண்டு வந்தனர். அதோடு இல்லாமல் சில விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சியினர் சிலரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசியல் ஈடுபாடு உள்ள விஜய் ரசிகர்கள் சிலர் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வருகின்றனர். சில மூத்த தலைவர்களை கிண்டல் செய்து மீம்ஸ் கூட போட்டு வருகின்றனர்.

கூடாது
இப்படி அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்று ஏற்கனவே விஜய் தரப்பு தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது. ஆனால் அதையும் மீறி விஜய் ரசிகர்கள் பலர் இப்படி தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இது விஜய் தரப்பிற்கு புகாராக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய் ரசிகர்களுக்கு இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications